இந்தியர்களுக்கு ஷாக் கொடுத்த தாய்லாந்து! விசா விதிகளில் வந்த மிக முக்கிய மாற்றம்! புது ரூல்ஸ் என்ன

  • டெல்லி: இந்தியப் பயணிகளின் ஆல்-டைம் ஃபேவரிட் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தாய்லாந்து தனது விசா விதிமுறைகளில் அதிரடியான ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 93 நாடுகளுக்கு வழங்கி வந்த 60 நாட்கள் 'விசா இல்லாத' சலுகையைத் தாய்லாந்து அரசு தற்போது ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

    Advertisement

    இந்தியர்கள் அதிகம் விரும்பி செல்லும் நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து இருக்கிறது. இந்தச் சூழலில் தான் தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமான ஒரு அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தாய்லாந்து

    கடந்த மே 19ம் தேதி தாய்லாந்து அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய விசா திருத்தங்களின்படி, ஒட்டுமொத்த விசா முறையையும் எளிமையாக்கவும் ஒழுங்குபடுத்தவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதிகள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ இதழான 'ராயல் கெசட்'-டில் வெளியான 15 நாட்களில் நடைமுறைக்கு வரும்!

    வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா விதிமுறைகளில் தெளிவான மற்றும் நிலையான தரநிலையைக் கொண்டுவர "ஒரு நாடு, ஒரு தாய்லாந்து விசா விலக்கு சலுகை" என்ற புதிய கொள்கையைத் தாய்லாந்து கையில் எடுத்துள்ளது. அனைத்து நாடுகளுக்குமான 60 நாட்கள் விசா விலக்குத் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், 30 நாட்கள் விசா விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் 57-லிருந்து 54 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது . இது தவிர மூன்று நாடுகளுக்கு மட்டும் புதிய 15 நாட்கள் விசா விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. விசா ஆன் அரைவல் பட்டியலில் இருந்த 31 நாடுகள், தற்போது வெறும் 4 நாடுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது!

    Advertisement

    சலுகை

    கொரோனா பாதிப்பிற்குப் பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சுற்றுலாவை ஊக்குவிக்கவுமே கடந்த ஜூலை 2024ல் இந்த 60 நாட்கள் விசா இல்லா சலுகை இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த விசா கொள்கையினால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், சட்டவிரோத வேலைவாய்ப்புகள், போலி நிறுவனங்கள் மற்றும் சர்வதேசக் குற்றங்கள் அதிகரித்ததாகத் தாய்லாந்து அரசு கருதுகிறது.

    இது தொடர்பாக தாய்லாந்து சுற்றுலாத் துறை அமைச்சகம், "இனி வெறும் சுற்றுலாப் பயணிகளின் நம்பரை மட்டும் பார்க்காமல், நாட்டின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் சமநிலைப்படுத்தும் 'தரமான சுற்றுலாப் பயணிகளை' ஈர்ப்பதே எங்கள் இலக்கு" எனத் தெரிவித்துள்ளது. ஜூலை 2024 முதல் விசா இல்லாமல் ஜாலியாக தாய்லாந்து சென்று வந்த இந்தியர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய ஏமாற்றமாகும்.

    Advertisement

    விசா கட்டாயம்

    புதிய விதிகளின்படி, விசா விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட்டு, 'விசா ஆன் அரைவல்' (Visa on Arrival - VOA) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது இந்தியப் பயணிகள் இனி தாய்லாந்து விமான நிலையங்களில் இறங்கியவுடன், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து 'விசா ஆன் அரைவல்' பெற வேண்டும். இதன் மூலம் தாய்லாந்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே தங்க முடியும்.. நீண்ட நாட்கள் தாய்லாந்தை என்ஜாய் செய்ய விரும்புவோருக்கு இது முட்டுக்கட்டையாக அமையலாம்!

    யாருக்கு பொருந்தும்!

    இந்த புதிய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே தாய்லாந்திற்குச் சென்று தங்கியிருக்கும் பயணிகளையோ அல்லது விதிகள் அமலாகும் முன் செல்லத் திட்டமிடுபவர்களையோ இது உடனடியாகப் பாதிக்காது. அவர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் முடியும் வரை அங்கு தங்கிக் கொள்ளலாம்.. புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு செல்பவர்கள், முறைப்படி விசா ஆன் அரைவல் அல்லது தாய்லாந்தின் 'இ-விசா' (e-Visa) முறை மூலமாக விண்ணப்பித்துத்தான் செல்ல வேண்டும்!

    English Summary

    Thailand government has officially scrapped the 60-day visa exemption policy for 93 countries, including India(தாய்லாந்து விசா ரூல்ஸில் வந்த மாற்றம்): Thailand visa rules latest news in tamil.