தலைமை தேர்தல் ஆணையரை கைது செய்யணும்.. டெல்லி இந்தியா கூட்டணி கூட்டத்தில் திருமா ஆவேசம்

  • டெல்லி: சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் மற்றும் கைது செய்யப்பட வேண்டும். ஞானேஷ் குமாரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்ததற்காக பிரதமரும், உள்நாட்டுத் துறை அமைச்சரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், டெல்லியில் நடைபெற்ற 'இண்டியா' கூட்டணிக் கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

    Advertisement

    எஸ்ஐஆர் நடவடிக்கை பற்றிய கேள்வி எழுப்பிய திருமாவளவன், மோடி அரசால் 2023-ல் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் 'சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை' (SIR - Special Intensive Revision) தொடர்பாக, இரண்டு தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய ஆட்சேபனைகள் குறித்த 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி, SIR நடவடிக்கையின் சட்டப்பூர்வத் தன்மை மீது தீவிரக் கேள்விகளை எழுப்பியுள்ளது என்று கூறினார்.

    வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல்கள் செல்லுமா என்ற கேள்வியை எழுப்பி, அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்றும் திருமாவளவன் விமர்சித்தார்.

    Advertisement

    மேலும் திருமாளவன் கூறுகையில், ' பீகார் மற்றும் தமிழ்நாட்டில் SIR நடவடிக்கையை எதிர்த்து விசிக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் இதுவரை இதில் நிவாரணம் வழங்காதது கவலையளிக்கிறது. மூன்று தேர்தல் ஆணையர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை, வெறும் ஆணையர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு மட்டுமல்ல; இது நமது தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே பாதிக்கும் விஷயம் என்றார்.

    'இண்டியா கூட்டணிக்கு விசிக முன்வைத்துள்ள 8 கோரிக்கைகள்

    சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் மற்றும் கைது செய்யப்பட வேண்டும்.

    Advertisement

    தற்போது நடைபெற்று வரும் எஸ்ஐஆ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டவர்களின் சமூகப் பின்னணி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.

    நீக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களின் பெயர்களையும் மீண்டும் சேர்க்க வேண்டும்.

    வாக்களிக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற வேண்டும்.

    ஞானேஷ் குமாரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்ததற்காக பிரதமரும், உள்நாட்டுத் துறை அமைச்சரும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023-ஐத் திரும்பப் பெற வேண்டும்.

    ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாடு தழுவியப் போராட்டத்தை அறிவிக்க வேண்டும்." இவ்வாறு திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    English Summary

    Thirumavalavan has demanded that Chief Election Commissioner Gyanesh Kumar resign and be arrested, alleging his involvement in illegal activities. He has also insisted that the Prime Minister and the Home Minister offer a public apology for appointing Gyanesh Kumar as Chief Election Commissioner.