திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம்! உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையில்லை! சுப்ரீம் கோர்ட்!

  • டெல்லி: "திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்" என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு தற்போதைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு சில கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

    Advertisement

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அன்று கார்த்திகை தீபத்தின் போது தீபம் ஏற்றக் கோரி மதுரையைச் சேர்ந்த ராமரவிக்குமார் உள்ளிட்ட இந்து அமைப்பினர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மனுதாக்கல் செய்தனர்.

    Advertisement

    அந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படாமல் வழக்கம் போலு உச்சி பிள்ளையார் கோயில் இருக்கும் தீபத்தூணிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜரான அவர்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு வருத்தம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்த்து உயரதிகாரிகளும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

    Advertisement

    அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைக்கு தடை விதித்தது. அது போல் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்தது.

    இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இந்து அறநிலையத் துறை செயலாளர் ராம ரவிக்குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகிய அமர்வு முன்பு இன்று (ஆக.3) விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தற்போதைய சூழலில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவிற்கு எந்த தடையும் பிறப்பிக்க முடியாது. வழக்கை முழுமையாக விசாரித்து அதன் பிறகு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

    மேலும் கடந்த ஜனவரி மாதம் தனி நீதிபதி உத்தரவிட்டதற்கு மேல்முறையீடு செய்ய இத்தனை நாட்களா, கிட்டதட்ட 7, 8 மாதங்களாக தமிழக அரசு என்ன செய்து கொண்டிருந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

    English Summary

    Supreme Court uphold the Chennai HC Madurai bench judgement to light a lamp on Deepa Thoon in Thiruparankundram Hill.