நம்ம ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தான் தேசத்தின் தந்தை.. இஸ்லாமிய தலைவர் உமர் அகமது இலியாசி


டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள மசூதிக்கு மோகன் பகவத் சென்றுள்ள நிலையில், இது தொடர்பாக அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

உத்தரப் பிரதேசம் வாரணாசியில் அமைந்துள்ளது புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயில். அந்த கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இது அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதேநேரம் மற்றொரு தரப்பினர் அங்கு இந்து கோயில் ஒன்று இருந்ததாகவும் அதை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஞானவாபி மசூதி கட்டியதாகவும் கூறி வந்தனர். இந்த குற்றச்சாட்டுச் சமீப காலத்தில் அதிகரித்தது.

ஞானவாபி மசூதி வழக்கு: இந்து பெண்கள் மனு விசாரணைக்கு ஏற்பு - முஸ்லிம் தரப்பு கூறுவது என்ன?

ஞானவாபி மசூதி

இந்தச் சூழலில் மசூதி வளாகத்தில் இருக்கும் சுவர்களில் உள்ள இந்து தெய்வங்களைத் தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் சில பெண்கள் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த இந்து தெய்வங்களை வழிபாடு செய்ய வருடத்தில் குறிப்பிட்ட நாட்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அனைத்து நாட்களும் அனுமதி அளிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.

மோகன் பகவத்

இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இதெல்லாம் நடந்தது கடந்த ஆகஸ்ட் மாதம். இந்த வழக்கு இப்போதும் நடந்து வருவது தனிக்கதை. ஆனால் ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை கிளம்பிய போதே, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 'ஒவ்வொரு மசூதியின் அடியிலும் சிவலிங்கத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை' என்று கூறி இருந்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவரே இப்படிக் கூறுவதைப் பல இஸ்லாமியத் தலைவர்களும் வரவேற்றனர்.

மசூதி வருகை

இந்தச் சூழலில் கடந்த மாதம் நாட்டின் முக்கிய 5 இஸ்லாமியத் தலைவர்கள் மோகன் பகவத்தை சந்தித்தனர். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர்கள் சுமார் 75 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி இருந்தனர். இந்தச் சூழலில் தான் டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பலத்த வருகை தந்தார். இதன் காரணமாக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

டெல்லி மசூதி

மத்திய டெல்லியின் கஸ்தூரிபா காந்தி மார்க்கில் உள்ள ஒரு மசூதிக்கு அவர் சென்றார். அதைத் தொடர்ந்து வடக்கு டெல்லியில் உள்ள ஆசாத்பூரில் உள்ள மதராஸாவில் சென்று அங்குள்ள தஜ்வீதுல் குரானைப் பார்வையிட்டார். மேலும், அங்கு அகில இந்திய இமாம் அமைப்பின் தலைமை மதகுரு உமர் அகமத் இலியாஸியை அவர் சந்தித்துப் பேசினார். மோகன் பகவத்தின் இந்த வருகையின் போது முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, டெல்லி முன்னாள் ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் அங்கு இருந்தனர்.

தேசத்தின் தந்தை

இந்நிலையில், அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை 'ராஷ்டிர பிதா' அதாவது (தேசத்தின் தந்தை) என்று குறிப்பிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'என் அழைப்பின் பேரில் மோகன் பகவத் இன்று இங்கு வருகை தந்தார். அவர் தான் நாட்டின் 'ராஷ்டிர-பிதா' (தேசத்தின் தந்தை) மற்றும் 'ராஷ்டிர-ரிஷி'..

மனிதநேயம்

அவரது வருகை நாட்டில் உள்ள மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை எடுத்துக் காட்டும். நாம் கடவுளை வழிபடும் முறைகள் வேறு.. ஆனால் அதையெல்லாம் தாண்டியது மனிதநேயம். அனைத்தையும் விட நாடு தான் முதன்மையானது. இதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்' என்று அவர் தெரிவித்து உள்ளார். இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாசியின் இந்த கருத்துகள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

ஆர்எஸ்எஸ்

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்லாமிய மத தலைவர்களை மோகன் பகவத் சந்தித்து இருந்தார். இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் கூறுகையில், 'இது எங்களின் தொடர் நடைமுறையில் ஒரு பகுதி தான். இதில் வித்தியாசமானது எதுவும் இல்லை. ஆர்எஸ்எஸ் அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்கும்' என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு ஒன்இந்தியா தமிழ் டெலிகிராம் சானல்

English Summary

Top Muslic cleric said RSS chief Mohan Bhagwat is rashtra pita: RSS chief Mohan Bhagwat visited a mosque and a madrasa in delhi.
Read more...