உலக தலைவர்கள் பலர் வந்தாலும் டிரம்ப் முதலில் சந்திக்க விரும்புவது மோடியை தான்! அமெரிக்க தூதர் நறுக்

  • டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க விரும்பும் உலக தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருப்பார் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் சர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். மோடி மற்றும் டிரம்ப் இடையேயான நட்புறவு மேம்பட்டு வரும் நிலையில், டிசம்பரில் நடக்கும் ஜி20 மாநாட்டு முக்கியமானதாக இருக்கும் என்றும் அதில் மோடி- டிரம்ப் இடையே முக்கிய சந்திப்பு நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Advertisement

    டிரம்ப் கடந்தாண்டு அதிபராக பதவியேற்ற சமயத்தில் இந்தியா அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. வரி, குடியேற்றத்தில் கட்டுப்பாடு என டிரம்ப் பல நடவடிக்கைகளை எடுத்தார். இருப்பினும், அதன் பிறகு இரு நாட்டு உறவு மெல்ல மேம்பட்டது. பல விஷயங்களில் கருத்துவேறுபாடுகள் குறைந்து நல்லுறவு ஏற்பட்டது. அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.

    Advertisement

    டிரம்ப் மோடி நட்பு

    இதற்கிடையே ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவுக்கு பேட்டியளித்த கோர், "அமெரிக்க அதிபரை பார்க்க ஒரே நேரத்தில் பல தலைவர்கள் வருகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அவர்களில் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால், எப்போதுமே அவர் பிரதமர் மோடியின் பெயரையே முதலில் சொல்வார். மோடியை டிரம்ப் தனது நண்பராக கருதுவதால், ஜி20 மாநாட்டின் போது இருவருக்கும் இடையே முக்கிய சந்திப்பு நடைபெற வாய்ப்பு அதிகம்" என்றார்.

    மேலும், 2020ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த பயணத்தை டிரம்ப் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வதாகவும், அப்போது சந்தித்த மக்களையும் பிரதமர் மோடியுடனான நட்பையும் அவர் அடிக்கடி நினைவுபடுத்துவதாகவும் கோர் தெரிவித்தார். டிரம்ப் அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியா வருவதற்கான வாய்ப்பும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    இந்தியா அமெரிக்கா

    இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மறுசீரமைக்கப்பட்டு வருவதாக சர்ஜியோ கோர் கூறினார். இருப்பினும், ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இரு நாடுகளும் மிகவும் நெருக்கமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும், "அடுத்த சில மாதங்களில் ஒப்பந்தம் முடிவடையும். தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் சுமார் 240 பில்லியன் டாலராக உள்ளது. அதை அடுத்த சில ஆண்டுகளில் 500 பில்லியன் டாலராக உயர்த்த மோடியும் டிரம்பும் இலக்கு நிர்ணயித்துள்ளதுள்ளனர்.

    மோடிக்கு பாராட்டு

    பிரதமர் மோடி இந்தியாவுக்கு நிலைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக அமெரிக்கா மாறியிருக்கிறது. அமெரிக்க தூதரகம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 24 பில்லியன் டாலர் புதிய முதலீடுகளை ஈர்க்க உதவியுள்ளது. அதேபோல் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் டேட்டா சென்டர்கள், AI மையங்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது" என்றார்.

    Advertisement

    இந்தியாவை அமெரிக்காவின் நம்பகமான பாதுகாப்பு கூட்டாளி என்று குறிப்பிட்ட கோர், இரு நாடுகளின் பாதுகாப்பு உறவு வெறும் ஆயுத விற்பனையை மட்டும் அடிப்படையாக கொண்டது அல்ல என்று அது நம்பிக்கையையும் உள்ளடக்கியது என்றும் தெரிவித்தார். ஜாவலின் ஏவுகணை திட்டம், அப்பாச்சி ஹெலிகாப்டர் விநியோகம் மற்றும் எதிர்கால பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை அவர் சுட்டிக்காட்டினார்.

    குவாட் நாடுகள்

    இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடம்பெறும் குவாட் அமைப்பு இரு நாடுகளின் உறவில் முக்கியமானதாக இருப்பதாக கோர் கூறினார். மனிதாபிமான உதவி, பேரிடர் மீட்பு, ராணுவ ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு, டேட்டா சென்டர்கள் மற்றும் முக்கிய கனிமங்கள் என பல விஷயங்களில் குவாட் நாடுகள் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அடுத்த குவாட் அமைச்சர்கள் கூட்டம் சிட்னியில் நடைபெற உள்ள நிலையில், நான்கு நாடுகளின் தலைவர்களையும் உள்ளடக்கிய உச்சி மாநாட்டை நடத்த அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் கோர் கூறினார்.

    English Summary

    US Ambassador to India Sergio Gor said Prime Minister Narendra Modi would be at the top of Donald Trump(டிரம்ப் மோடி நட்பு குறித்த செய்திகள்): Modi Trump Friendship latest in tamil.