விஜய் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்! இறுதி அறிக்கை தயார் செய்யும் சிபிஐ

  • டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விரைவில் உச்ச நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பிறகு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டு உள்ளது.

    Advertisement

    தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது.

    Advertisement

    அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்சி ஆனந்த், முதல்வர் விஜய், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. கரூர் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் இந்த விசார்ணை நடத்தப்பட்டது. விஜய்யிடம் இரண்டு முறை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. மாதம் தோறும் விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவிற்கு சிபிஐ அறிக்கையாக அளித்து வந்தது.

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தற்போது விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை சிபிஐ தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே வரும் வாரத்தில் நீதிபதி அஜஸ் ரஸ்தோகியிடம் சிபிஐ தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையை அஜய் ரஸ்தோகி மற்றும் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளும் படித்து பார்ப்பார்கள். அதன்பிறகு, சிபிஐயின் வரைவு அறிக்கை உறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    அதற்கு பிறகு, இறுதி அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு, கரூர் வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் மாறி மாறி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. கடந்த மாதம் கரூர் சென்ற முதல்வர் விஜய், கரூர் விவகாரத்தில் முந்தைய திமுக அரசின் காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்திலும் உன்னிப்பாக கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

    English Summary

    Karur Stampede: Reports indicate that the CBI is set to file its final report with the Supreme Court soon regarding the stampede incident in Karur. Following this, the CBI plans to file a charge sheet in court.