உமர் காலித்துக்கு எப்போதோ பெயில் கிடைத்திருக்கணும்! உடைத்து பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி!

  • டெல்லி: UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் உமர் காலித் மற்றும் சர்ஜீல் இமாம் ஆகியோர் எந்த விசாரணையும் இல்லாமல் கடந்த 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்து பேசிய, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதான்ஷு துலியா, அவர்களுக்கு எப்போதோ பெயில் கிடைத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    'இந்திய அரசியல் அமைப்பில் நீதியின் பார்வை' என்ற தலைப்பில் நடைபெற்ற '3வது சையத் விரிவுரை' நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி சுதான்ஷு பங்கேற்றிருந்தபோது மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்திருக்கிறார். இந்த கருத்துக்கள் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கின்றன.

    Advertisement

    பெயில் கிடைத்திருக்க வேண்டும்

    சுதான்ஷு பங்கேற்றிருந்த கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வந்தார். அப்போது, "டெல்லி கலவர சதி வழக்கில், விசாரணை கைதிகளாக கடந்த ஆண்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும், உமர் காலித் மற்றும் இமாம் ஆகிய இருவருக்கும் இன்றல்ல.. எப்போதோ பெயில் கிடைத்திருக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்து" என்று கூறியிருக்கிறார்.

    பாஜக ஆட்சியில் மட்டுமா?

    அதேபோல ஆளும் அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுக்கும் நீதிபதிகளுக்கு, அவர்களின் ஓய்வுக்குப் பிறகு ராஜ்யசபா எம்பி அல்லது ஆளுநர் போன்ற பதவிகள் வழங்கப்படுவது குறித்து, கூட்டத்தில் பங்கேற்றிருந்த ஒருவர் நீதிபதி சுதான்ஷுவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

    Advertisement

    அதுக்கு பதில் அளித்த நீதிபதி, "இதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட அரசாங்கத்தை மட்டும் நாம் குற்றம் சாட்டி விட முடியாது. காங்கிரஸ் காலம் ஜனதா கட்சி காலம் என இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து நடந்துதான் வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

    மக்கள் கையில்தான் இருக்கிறது

    அதேபோல, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு நீதி கிடைப்பதில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்.. "மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அரசியலில் பங்கெடுக்க வேண்டும். பலர் எனக்கு அரசியல் பிடிக்காது என்று பெருமையுடன் சொல்வதை நான் பார்க்கிறேன். ஆனால், அது தவறு! மக்கள் அரசியலற்று இருப்பதால்தான் விலைவாசி உயர்வும், தவறான மற்றும் ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவதும் நடக்கிறது. இந்த நிலையை மாற்ற.. ஜனநாயக வழியில் மக்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

    Advertisement

    எல்லோருக்கும் எல்லாமும்

    இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கும் வரை, அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை முழுமையாக அனுபவிக்க முடியாது. பசியோடு இருக்கும் மனிதனுக்கு தேவையானது உணவு தானே தவிர, சுதந்திரம் அல்ல என்று நேரு கூறியிருக்கிறார். தற்போதைய சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்.. காலம் எப்போதும் மாறும் தன்மை கொண்டது! எதிர்காலத்தில் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையையும் இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.

    English Summary

    Umar Khalid and Sharjeel Imam, who were arrested under the UAPA, have been imprisoned for the past six years without any trial. Former Supreme Court judge Sudhanshu Dhulia, commenting on this, stated that they should have been granted bail long ago.