தர்மேந்திர பிரதான் இல்லை.. மத்திய கல்வித்துறை செயலாளரை மாற்றம் செய்த மத்திய அரசு

  • டெல்லி: 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் மத்திய கல்வித்துறை செயலாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    மத்திய கல்வித்துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி வினித் ஜோஷி செயல்பட்டு வந்தார். இவர் கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த பொறுப்பில் வகித்து வந்தார். தற்போது 'நீட்' வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் வலுத்து வரும் நிலையில் வினித் ஜோஷி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    வினித் ஜோஷி கல்வித்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மத்திய பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வினித் ஜோஷி மணிப்பூரை கேடரை சேர்ந்தவர். 1992ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ஐஐடி கான்பூரில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர். அதன்பிறகு ஐஐஎஃப்டியில் எம்பிஏ படிப்பை முடித்தவர்.

    வினித் ஜோஷி மணிப்பூரில் தலைமை செயலாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமின்றி நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் முதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ தலைவராகவும், கல்வித்துறையின் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இப்படி கல்வித்துறை சார்ந்த பொறுப்புகளில் நீண்டகாலம் அனுபவம் கொண்ட வினித் ஜோஷி தற்போது தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    வினித் ஜோஷிக்கு பதில் மத்திய கல்வித்துறை செயலாளராக நரேஷ் கங்க்வார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய கல்வித்துறை செயலாளரான நரேஷ் கங்க்வார் 1994ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் ராஜஸ்தான் கேடரை சேர்ந்தவர். பிடெக் எலக்ட்ரானிக் மற்றுமு் கம்யூனிகேஷன் பிரிவில் படிப்பை முடித்தவர். அதன்பிறகு ஐஐடி டெல்லியில் எம்டெ படிப்பை முடித்தார். பிறகு எம்ஏ பொருளாதாரம் படிப்பை முடித்தார். இவர் ராஜஸ்தானில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

    ராஜஸ்தானில் சுற்றுச்சூழல், வனம் மற்றுமு் காலநிலை மாற்றம் துறையின் இணை செயலாளராக பணியாற்றினார். அப்போது மாசு கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து பெயர் பெற்றார். தற்போது மத்திய அரசு பணியில் உள்ளார். மத்திய அரசின் கால்நடை துறை மற்றும் பால்வளத்துறையின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தான் மத்திய கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    English Summary

    Protests are ongoing in Delhi demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan, holding him accountable for the NEET question paper leak; however, the Central Government has not heeded these demands. Amidst this situation, the Union Education Secretary has been transferred.