டெல்லி: நம் நாட்டுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த 17 பாகிஸ்தானியர்கள், 6 இந்தியர்கள் என்று மொத்தம் 23 பேரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ''மோடியின் பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற என்ற கொள்கையை தொடர்ந்து வருகிறோம். இன்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் 23 பேர் சட்டவிரோத செயல் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளோம்.
பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்கள் இந்தியாவில் சட்டவிரோத செயல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், ஆயுதம் கடத்தல், பயங்கரவாதத்தை தூண்டுதல், எல்லை வழியாக ஊடுருவல், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தல் உள்ளிட்டவற்றில் தொடர்பு கொண்டவர். இன்று பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 23 பேரில் 17 பேர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். 6 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இருப்பினும் இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகளின் வழி காட்டுதலில் செயல்பட்டு வந்தவர்கள் ஆவார்கள். இந்தியாவையும், இந்திய மக்களையும் பாதுகாக்க ஒவ்வொரு பயங்கரவாத குழுவையும் வேரறுப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது'' என கூறியுள்ளார். இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெயர்கள் பின்வருமாறு: 1. மசூத் இல்யாஷ காஷ்மீரி 6.பிர்டோஸ் அகமது பட் 11. அப்துல ராப் 16. மவுலானா யூசுப் தைபி 21. முகமது ஷாகித் பைசல்
2.முகமது முசதிக்
3.முப்தி முகமது அஸ்கர் கான்
4.ஹபிஸ் அப்துல் ஷாகூர்.
5. அப்துல்லா ஜிகாதி
7.குலாம் பரித்
8.பிலால் அகமது மிர்
8.அபித் குயோம் லோன்
10.நசீர் அகமது குஜ்ஜார்
12. அஷ்பக் அகமது
13. ஹபி் காலித் வலித்
14.மவுலானா சாய்புல்லா கலித்
15.முகமது யாகூப்
17.ஓவைசி பாரூஸ்
18. காரி யாகூப் செய்க்
19. ராணா இப்திகார்
20. வாசீம் நூர் ஜாட்
22.மவுலானா இமாத் உல்லா மக்கி
23. ஹரூன் ரஷித் கனாய் ஆகியோர் தான் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.