ரூ.2 ஆயிரத்திற்கு மேலான யுபிஐ பரிவர்த்தனை.. கட்டணம் வசூல் திடீர் ஒத்திவைப்பு! வணிகர்களுக்கு ஆறுதல்

  • டெல்லி: ரூ.2 ஆயிரத்திற்கும் மேலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்காக வணிகர்களுக்கு 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கும் முறை நாளை மறுநாள் (அக்.15) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வணிகள் கோரிக்கையை ஏற்று முடிவை மாற்றியுள்ளது மத்திய அரசு. தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது.

    Advertisement

    கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் வழியாக மக்கள் பணம் செலுத்தும் முறை அதிகரித்துள்ளது. பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை யுபிஐ வழியாகவே பெரும்பாலான பரிவர்த்தனை தற்போது நடைபெற்று வருகிறது.

    Advertisement

    யுபிஐ சேவைகளுக்கு என தற்போது வரை கட்டணம் எதுவும் பிடித்தம் செய்யப்படாத நிலையில், வரும் 15 ஆம் தேதி வணிகர்களுக்கு கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்று இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) அறிவித்தது. ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வணிகர்கள் 0.4% கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    எம்.டிஆர் என்று என்று அழைக்கப்படும் வணிகர் தள்ளுபடி விகிதம்' ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.300 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஒரு வணிகர் ரூ.75,000 அல்லது அதற்கும் அதிகமான தொகை யுபிஐ மூலம் செலுத்தப்பட்டாலும், அதற்கான கட்டணம் ரூ.300-க்கு மிகாது என இந்திய தேசிய கட்டணக் கழகம் தெரிவித்து இருந்தது. அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது.

    Advertisement

    சாமானிய மக்கள் தங்களுக்குள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டது. எனினும், இந்தக் கட்டணத்தை வணிகர்கள் வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வாயுப்புள்ளதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வணிகர்களும் தங்ளுக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என்று கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தனர். பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்ற நிலையில், மத்திய அரசு தனது முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது.

    அதாவது, நாளை மறுநாள் முதல் கட்டணம் வசூல் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தீபாவளிக்குப்பிறகே வணிக பரிவர்த்தனைக்கான கட்டணம் வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8 ஆம் தேதி வருகிறது.

    Advertisement

    எனவே தீபாவளிக்குப் பிறகே இந்த வணிகர்களுக்கான யுபிஐ கட்டணம் வசூல் முறை அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை கால வர்தத்தகத்தை பாதிக்கும் என்று வணிகள் கோரிக்கை விடுத்ததால் அதனை ஏற்று, ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய கட்டணக் கழகம் தெரிவித்துள்ளது.

    English Summary

    UPI MDR charge: Although it had been announced that a 0.4% charge on UPI transactions exceeding ₹2,000 would be levied on merchants starting the day after tomorrow (October 15), the Central Government has reversed this decision in response to requests from the merchant community. The NPCI has stated that the charging system will come into effect only after the Diwali festival.