யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வருகிறதா? ரிசர்வ் வங்கி கவர்னர் சொல்வது என்ன?

  • டெல்லி: யுபிஐ செயலிகள் வாயிலாக ரூ.2,000-க்கு மேல் செலுத்தப்பபடும் வணி​கப் பரிவர்த்​தனை​களுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்​ட​ணம் வசூலிக்க மத்​திய அரசு விரைவில் அனுமதி அளிக்​கக்​கூடும் எனத் தகவல் பரவி வருவது யுபிஐ பயனர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியது என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    டிஜிட்டல் பயன்பாடு தற்போது மக்களிடையே அதிகரித்துள்ளது. சாதாரண பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை யுபிஐ வழியாக மக்கள் பணம் செலுத்தி வருகிறார்கள். கையில் ரொக்கமாக பணம் வைத்து இருக்க வேண்டியது இல்லை. சில்லரை பிரச்சினை இல்லை.. சில நொடிகளில் பேமண்ட் செலுத்திவிடலாம் என்பதால் யுபிஐ வழியாகவே மக்கள் பணம் செலுத்த தற்போது ஆர்வம் காட்டுகிறார்கள்.

    Advertisement

    விரைவில் கட்டணம் வசூலிக்க முடிவு

    ஆனால் யுபிஐ பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மத்திய அரசு, விரைவில் கட்டணம் வசூலிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் யுபிஐ மற்றும் ரூபே டெபிடி கார்டு பரிவர்த்தனைகளுக்காக அளித்து இருந்த தள்ளுபடியை ரத்து செய்து மீண்டும் கட்டணம் வசூலிக்க அரசு பரிசீலித்து வருகிறதாம்.

    ரூ.2 ஆயிரத்திற்கு மேல் பணம் செலுத்தினால்

    2 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை வர்த்தக தள்ளுபடி கட்டணத்தை மீண்டும் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு வணிகர்களுக்கு மட்டும் இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது. ஆண்டு வருவாய் 1.50 கோடி வரை உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பரிவர்த்தனை தொகையை கணக்கில் கொள்ளாமல் இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

    Advertisement

    தற்போது 2 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அரசு 0.15 சதவீதம் ஊக்கத்தொகையை அரசு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் டிஜிட்டல் கட்டமைப்பு செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த ஊக்கத்தொகை போதுமனதாக இல்லை என பண பரிவர்த்தனை கவுன்சில் கூறியுள்ளது. எனவேதான், விரைவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது

    பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது எனவும் வழக்கம் போல கட்டணம் இன்றியே பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனினும், சிறு செலவுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை வராது என்றாலும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகைகளுக்கு செலுத்த வேண்டியிருப்பதால், வணி​கர்​கள் இந்​தக் கட்டணத்தை வாடிக்​கை​யாளர்​கள் மீது சுமத்​து​வார்​களா? அல்​லது அவர்களே ஏற்​றுக்​கொள்​வார்​களா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

    Advertisement

    ரிசர்வ் வங்கி கவர்னர் சொல்வது என்ன?

    முன்னதாக நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி கவர்னர், "கட்டணம் பற்றி தற்போதே பேசுவது உகந்தது அல்ல. அரசு இன்னும் இதற்கான திருத்தத்தைச் செயல்படுத்தி வருகிறது. கட்டணம் என்பது யாராவது ஒருவர் செலுத்தியாக வேண்டும். இந்த பொது உள்கட்டமைப்பு வலுப்பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை பொறுத்து இருந்து பார்ப்போம்" என்றார்.

    English Summary

    UPI transactions will charges: Reports suggesting that the Central Government may soon permit a charge of 0.25% to 0.4% on merchant transactions exceeding ₹2,000 made via UPI apps have caused alarm among users. Let us look at what the RBI Governor has said regarding this matter.