Gen Z இல்லை.. பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் Gen X.. எதிராக திரும்பும் உயர்சாதி இந்துக்கள்! என்ன காரணம்

  • லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பாஜகவுக்கு புதிய சவால் உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Gen Z இளைஞர்களே பாஜகவுக்கு சவாலாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், Gen Zஐ விட, அவர்களை வளர்த்த Gen X தலைமுறையினர் பாஜக மீது அதிக அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தியாவில் கடந்த மாதம் Gen Z தலைமுறையினர் மிக பெரிய போராட்டத்தை நடத்தி, மத்திய அரசையே பின்வாங்க வைத்தனர். இதனால் வரும் காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே Gen Z தலைமுறையினர் தான் பெரிய சவாலாக இருப்பார்கள் என கூறப்பட்டது. இதற்கிடையே இந்தியா டுடே ஊடகத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான மூட் ஆஃப் தி நேஷன் சர்வே இப்போது வெளியாகியுள்ளது.

    Advertisement

    உத்தர பிரதேசம்

    அதில் உத்தர பிரதேசத்தில் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அங்கு இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்றால் 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 41 இடங்களை வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மறுபுறம் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 38 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜனவரியில் நடத்தப்பட்ட சர்வேயில் என்டிஏ 48 இடங்களிலும், இந்தியா கூட்டணி 31 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டிருந்தது.

    உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த சர்வே லோக்சபா தேர்தலை அடிப்படையாகக் கொண்டவை. இது 2027 சட்டசபை தேர்தலுக்கான நேரடி கணிப்பு அல்ல. இருப்பினும், பாஜகவின் முக்கியமான அரசியல் கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரதேசத்திலேயே மக்கள் பாஜகவுக்கு எதிராக மாறியுள்ளது முக்கியமான மாற்றமாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    Gen X

    இது தொடர்பாக தேர்தல் ஆய்வாளர் யஷ்வந்த் தேஷ்முக் கூறுகையில், "தற்போது கவனம் Gen Z மீதுதான் உள்ளது என்றாலும், உண்மையான தாக்கம் Gen X தலைமுறையிடம் இருக்கலாம்" என கூறியுள்ளார். 1965 முதல் 1980 வரை பிறந்தவர்களே Gen X என குறிப்பிடப்படுகின்றனர். அவர்களே பாஜகவுக்கு எதிராக உபியில் அதிருப்தியில் அதிகம் இருக்கிறார்கள்.

    மேலும், உயர்சாதியினர் மத்தியில் பல்கலைக்கழக மானிய குழுவின் சாதி பாகுபாடு தடுப்பு விதிமுறைகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். இந்த விதிமுறைகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றாலும், அவை முழுமையாக திரும்பப் பெறப்படவில்லை. நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், இது பாஜகவின் ஆதரவாளர்களான உயர்சாதியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    மண்டல் கமிஷன்

    யஷ்வந்த் தேஷ்முக் மேலும் கூறுகையில், "1989-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் வந்தது. அப்போது ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூக சிக்கல்களை Gen X நேரடியாக எதிர்கொண்டது. இந்த UGC விவகாரம் அந்த நினைவுகளை மீண்டும் தூண்டியுள்ளது. தங்களது குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் இந்த தலைமுறையினரிடம் உள்ளது" என்றார்.

    மண்டல் கமிஷன் பரிந்துரைகள் வந்தபோது, மத்திய அரசு வேலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக வட இந்தியாவின் பல பகுதிகளில் உயர்சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல பகுதிகளில் மிக பெரிய போராட்டங்களும் கூட நடந்தது.

    Advertisement

    உயர்சாதி இந்துக்கள்

    உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர் 20%க்கும் அதிகமான வாக்காளர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் 1989 முதல் பாஜகவின் முக்கிய வாக்கு வங்கிகளில் ஒன்றாக இருந்து வருகின்றனர். இந்த வாக்காளர்களில் வெறும் 2-3% பேர் கூட 2027 தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்காமல் போனால், அது பாஜகவின் வெற்றியை மிக மோசமாக பாதிக்கும்.

    இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரமும் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 47% பேர் இந்த விவகாரம் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுகளின் மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    பாஜக சறுக்கியது

    கடந்த 2024 லோக்சபா தேர்தலிலேயே உத்தர பிரதேசத்தில் பாஜக சறுக்கியது. அங்கு பாஜக 36 இடங்களை மட்டுமே வென்றது. சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. பாஜகவின் இந்து அரசியலுக்கு எதிராக சாதி ரீதியாக மக்கலை ஒருங்கிணைத்து, உள்ளூர் பிரச்சினைகளை வைத்து பிரசாரம் செய்தால் எதிர்க்கட்சிகளுக்கு அது சாதகமாக அமையும் என்பதையே இது காட்டுகிறது.

    சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 2027 உத்தர பிரதேச தேர்தல் பாஜகவுக்கு வெறும் Gen Z வாக்காளர்களை சமாளிக்கும் தேர்தலாக இல்லாமல், Gen X மற்றும் பாஜகவின் பரம்பரை உயர்சாதி இந்து வாக்காளர்களையும் தக்கவைக்க வேண்டிய தேர்தலாகவே இருக்கும்.

    English Summary

    With the 2027 Uttar Pradesh Assembly election approaching, a new survey suggests growing dissatisfaction with the BJP in the state(உத்தர பிரதேச தேர்தல் செய்திகள்): Uttar Pradesh Election latest news in tamil.