தமிழ்நாடு ஸ்டைலை பின்பற்றும் உத்தரபிரதேசம்! 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கு பஸ்களில் இலவசம்

  • லக்னோ: தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் பயண திட்டத்தை உத்தரப் பிரதேசமும் பின்பற்ற தொடங்கியுள்ளது. அந்த மாநிலத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் வாழ்நாள் முழுவதும் அரசு பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதன் மூலம் மாநிலத்தில் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அரசின் அனைத்து பஸ்களிலும் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய முடியுமாம்.

    Advertisement

    வாழ்நாள் முழுவதும் இலவசம்

    உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மக்களை கவரும் விதமாக தற்பொதே திட்டங்களை அறிவிக்க தொடங்கியுள்ளது அம்மாநில அரசு.

    அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அரசு பேருந்தில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு அம்மாநில கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. 'லோகமாதா அகல்யாபாய் மாத்ருசக்தி யோஜனா' என்ற திட்டத்தின் கீழ், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் வாழ்நாள் முழுவதும் இலவசமாகப் பயணம் செய்யத் தகுதி உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    1 கோடி பெண்கள் பயன் அடைவர்

    1 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள் எனவும், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இந்த திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்த பெண் பயணிகள் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகி ஆதிதய்நாத் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இந்த திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு செயல்படுத்த உள்ளது.

    இது மட்டுமின்றி மேலும் 24 திட்டங்களையும் உத்தரப் பிரதேசங்களுக்கும் உத்தர பிரதேச கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கவும் வியூகம் வகுத்து வருகிறது. அதன் ஒரு திட்டமாகாவே இந்த மகளிர் இலவச பேருந்து பயண திட்டமாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்த திட்டம்

    தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று மு.க ஸ்டாலின் அறிவித்தார். இதனை கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் பின்பற்றி இலவச பயண திட்டத்தினை அறிவித்தது.

    தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில், மகளிர் பயண திட்டம் விரிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம்.

    Advertisement

    அக்டோபர் 2 ஆம் தேதி முதல்..

    கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லாப் பயணங்கள் மேற்கொள்ளலாம். இந்த திட்டம் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

    English Summary

    Uttar Pradesh has begun to adopt the women's travel scheme that is being successfully implemented in Tamil Nadu. A cabinet meeting led by Yogi Adityanath approved a scheme in the state allowing all women over the age of 60 to travel free of charge on government buses for their entire lives.