மத நம்பிக்கை காரணமாக வந்தே மாதரம் பாட மறுத்தால் குற்றமில்லை! உச்ச நீதிமன்றம் மிக முக்கிய கருத்து

  • டெல்லி: வந்தே மாதரம் தொடர்பான வழக்கில்.. மத நம்பிக்கை காரணமாக வந்தே மாதரம் பாட மறுக்கும் நபரை குற்றவாளியாக கருதக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் தான் இது தொடர்பாக சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருந்த நிலையில், அதை எதிர்த்து கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவில் தான் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை கூறியுள்லது.

    Advertisement

    மத்திய அரசு சமீபத்தில் தான் Prevention of Insults to National Honour Act என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்ட திருத்தம் மூலம் தேசிய கீதம், தேசிய பாடலை பாட மறுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது போல கூறப்பட்டு இருந்தது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்திருந்தார்.

    Advertisement

    உச்ச நீதிமன்றம்

    இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, விசாரித்தது. வந்தே மாதரத்தின் ஆறு சரணங்களையும் பாட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவையும், அதற்கான சட்டத் திருத்தத்தையும் எதிர்த்து டிஎம் கிருஷ்ணா மனு தாக்கல் செய்திருந்தார். வந்தே மாதரத்தின் கடைசி நான்கு சரணங்கள் இந்து தெய்வங்கள் குறித்த இருப்பதால், அவற்றை கட்டாயப்படுத்தி பாட வைப்பது மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதே டிஎம் கிருஷ்ணா தரப்பின் வாதமாகும்!

    வழக்கு விசாரணைக்கு வந்தபோது வந்தே மாதரத்தின் எந்த பகுதிகள் தேசிய பாடலாக கருதப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்று நீதிபதி ஜாய்மால்யா பாக்சி தெரிவித்தார். இரண்டு சரணங்களா அல்லது நான்கு சரணங்களா அல்லது ஆறு சரணங்களா என்பதை ஜனநாயக முறையில் அரசு தீர்மானிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    குற்றம் ில்லை

    ஆனால், மத நம்பிக்கை அல்லது மனசாட்சியின் காரணமாக பாட மறுக்கும் நபர் மீது அந்த குறிப்பிட்ட காரணத்திற்காக குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் இதற்காக தண்டனை வழங்கப்படக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதற்காக 1986ஆம் ஆண்டு 'பிஜோய் இமானுவேல் vs கேரள அரசு' வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பையும் சுட்டிக்காட்டினர்.

    என்ன நடந்தது!

    1986ல் கேரளாவைில் பிஜோய் இமானுவேல் உள்ளிட்ட மாணவர்கள் தேசிய கீதத்தை மட மறுத்திருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது மத நம்பிக்கைக்கு எதிரானது என கருதி தேசிய கீதத்தைப் பாடவில்லை. ஆனால், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அவர்கள் மரியாதையுடன் எழுந்து நின்றனர். இதற்காக அவர்களை பள்ளியில் இருந்து நீக்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

    Advertisement

    மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் பாட மறுப்பது மட்டும் தேசிய கீதத்தை அவமதித்ததாகக் கருத முடியாது என்பதே அந்தத் தீர்ப்பின் சாரம்சம்.. அதாவது மத நம்பிக்கையின் காரணமாக அந்த மாணவர்கள் தேசிய கீதத்தை பாட மறுத்தாலும், அதை அவமதிக்காமல் மரியாதையுடன் நின்றிருந்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பை குறிப்பிட்டே வந்தே மாதரம் விவகாரத்திலும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தேசிய பாடல்

    முன்னதாக வழக்கு விசாரணையின்போது டிஎம் கிருஷ்ணா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர், சட்டத்தில் தேசிய பாடல் என்றால் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றும் ஆறு சரணங்களையும் கட்டாயப்படுத்துவது தொடர்பான அரசின் உத்தரவுகள் அரசிதழில் வெளியிடப்படவில்லை என்றும் வாதிட்டார்.

    Advertisement

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "மதச்சார்பின்மையை இவ்வளவு குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது" என்று கூறினார். மேலும், சட்டம் இயற்றுவது நக்சலைட்டுகளின் விருப்பப்படி இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார். இதனால் இரு தரப்புக்கும் இடையே நீதிமன்றத்திலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த வழக்கில் நேற்று காரசார விசாரணை நடந்தது. இரு தரப்புமே பல முக்கிய வாதங்களை முன்வைத்தனர். அவை அனைத்தையும் குறித்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    English Summary

    Supreme Court has observed that a person who refuses to sing Vande Mataram should not face criminal action(வந்தே மாதரம் வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன வழக்கு): Vande Mataram Case latest news in tamil.