வாரணாசி ஏர்போர்ட்டில் துப்பாக்கிச்சூடு.. 2 பேர் காயம்! ஆயுத சோதனையின் போது விபரீதம்.. என்ன நடந்தது?

  • லக்னோ: வாரணாசி விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பைக்கு செல்ல இருந்த பயணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் 2 ஊழியர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சரக்கு கையாளுகை சேவை பிரிவில் பணியாற்றியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    பாதுகாப்பு விதிமுறைகளை மீறி துப்பாக்கி எடுத்து செல்லப்பட்டது எப்படி? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தால் வாரணாசியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    Advertisement

    விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

    நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று வாரணாசி விமான நிலையம். உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். எப்போதும் பிசியாக காணப்படும் இந்த விமான நிலையத்தில் இன்று துப்பாக்கி சூடு நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மும்பைக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய ஆசம்கார் என்ற பயணி, செக்கிங்கின் போது துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. காலை 9.30 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டில் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

    Advertisement

    என்ன நடந்தது?

    தன்னிடம் துப்பாக்கி மற்றும் அதற்கான குண்டு இருந்ததை பயணத்திற்கு முன்பே பயணி தெரியப்படுத்தியிருந்ததாகவும், அதன்பிறகு நடைபெற்ற சோதனையின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பயணி வேண்டும் என்றே சுட்டாரா? அல்லது தவறுதலாக இந்த சம்பவம் நடைபெற்றதா? என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காயம் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    English Summary

    Varanasi Airport Shooting: Two employees of the cargo handling service at Varanasi Airport were injured after a passenger travelling to Mumbai allegedly opened fire with a gun. Both victims were rushed to hospital for intensive treatment, while authorities launched a probe into how the firearm was taken inside the airport despite security regulations.