கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன?

  • டெல்லி: கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளார். மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் ஒத்துழைப்பு அளிக்க தங்கள் அரசு உறுதி பூண்டுள்ளதாக கூறிய விஜய், நீட் தேர்வை தமிழக அரசு எதிர்ப்பதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார். அதேபோல் ரூ.3,284 கோடி கல்வி நிதியை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

    Advertisement

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 11வது நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் விஜய் வைத்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்திற்கு இடையே பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு நடத்தியுள்ளார்.

    Advertisement

    அப்போது விஜய் தரப்பில், மத்திய அரசுக்கு ஆக்கப்பூர்வமான வகையில் ஒத்துழைப்பு வழங்க எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. இளைஞர் திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த விழைகிறோம். மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை நடத்த வேண்டும்.

    அதேபோல் தமிழ்நாட்டில் 2வது எய்ம்ஸ் மருத்துவமனையை கோவையில் அமைக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்த ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அவசியம். அதேபோல் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    Advertisement

    சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய ரூ.3,284 கோடி கல்வி நிதியை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையையோ, மும்மொழி கொள்கையை அமல்படுத்த வற்புறுத்த கூடாது. அதேபோல் சென்னை - கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும்.

    கரூர் - கோவை சாலையை 6 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும். மாதவரம் - சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் அமைக்க வேண்டும். செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும். ஒகேனக்கல் 3ஆம் கூட்டுக்குடிநீட் திட்டத்திற்கு ரூ.2,283.40 கோடி அளவிலான நிதி உதவி வழங்க வேண்டும்.

    Advertisement

    இலங்கை, பாகிஸ்தான் சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும். 2036க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    English Summary

    Vijay: CM Vijay Urges Center at NITI Aayog Meeting to Establish AIIMS Hospital in Coimbatore