தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!

  • தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், இன்று சேவா தீர்த் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 10 நிமிட மட்டுமே நீடித்தது பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

    Advertisement

    தமிழ்நாட்டின் கலாச்சாரம், மாநில தன்னாட்சி உரிமை மற்றும் அண்மையில் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பிய 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடும் நடைமுறை விதிகள் குறித்து மிக முக்கியமான கோரிக்கை ஒன்றை பிரதமரிடம் முதல்வர் விஜய் முன்வைத்துள்ளார்.

    Advertisement

    முதல் கோரிக்கை

    சமீபத்தில் முதல்வர் பதவியேற்பு விழா மற்றும் அமைச்சர்கள் பதவி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இறுதியாக பாடப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் விஜய்யின் முதல் பிரதமர் சந்திப்பில் முதல் கோரிக்கையாக தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து வைத்துள்ளார்.

    மாநிலத்தின் தனித்துவ அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தின் மாண்பைக் காக்கும் வகையில், மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

    பிரதமரிடம் முதல்வருடன் விஜய் சந்திப்பு

    இந்த அரசியல் சர்ச்சைகளுக்கும் குழப்பங்களுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தை நேரடியாகப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டில் எப்போதும் அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வரும் நீண்ட கால வழக்கம் உள்ளதை விஜய் பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.

    Advertisement

    இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சர்குலர் மூலம் ஏற்பட்டுள்ள இந்த நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலை முதன்மையாகப் பாடுவதற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் உரிய தெளிவுரையையும் (Clarification) அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலையும் விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் நேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    முதல்வர் - அமைச்சரவை பதவியேற்பு விழா

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்ற விழாவில் புதிய பாடல் நடைமுறை பின்பற்றப்பட்டது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலேயே மாநில வாழ்த்து பாடலான 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்பட்டு, நிகழ்ச்சி நிறைவடையும் போது 'தேசிய கீதம்' பாடப்படுவதுதான் மரபாக இருந்து வருகிறது.

    Advertisement

    ஆனால், புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழாவின் தொடக்கத்தில், 'வந்தே மாதரம்' பாடல் முதலாவதாக இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இரண்டாவதாகப் பாடப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது.

    அதேபோல், பதவியேற்பு விழா முழுமையாக நிறைவடையும் போதும், முதலில் வந்தே மாதரமும், அடுத்ததாக தேசிய கீதமும் பாடப்பட்டு நிகழ்ச்சி முடிக்கப்பட்டது. இந்தத் தலைகீழ் மாற்றம், தமிழ்நாட்டின் வழக்கமான அரசு நெறிமுறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக அமைந்திருந்தது.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஜனவரி மாத சர்குலர்

    இந்த மாற்றத்திற்குப் பின்னணியில், மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிட்ட ஒரு புதிய சர்குலர் (Circular) இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அந்த அரசாணையின்படி, சில குறிப்பிட்ட முக்கிய அரசு மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை முதலாவதாகப் பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    Advertisement

    இந்த மத்திய அரசின் புதிய விதிமுறையைப் பின்பற்றியே, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மற்றும் பொதுத்துறை அதிகாரிகள் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவிற்கான நிகழ்ச்சி நிரலை வடிவமைத்தனர். இதன் காரணமாகவே, தமிழ்நாட்டின் மரபிற்கு மாறாகத் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது என்ற புதிய விளக்கம் தற்போது வெளிவந்துள்ளது.

    கடுமையான எதிர்ப்பு

    தமிழ்நாடு அரசின் பாரம்பரிய நடைமுறையானது மாற்றியமைக்கப்பட்டு, மாநில வாழ்த்துப் பாடல் பின்னுக்குத் தள்ளப்பட்ட இந்த புதிய விவகாரத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகள், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளிடம் இருந்து மிகக் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தது.

    Advertisement

    மாநிலத்தின் இறையாண்மை மற்றும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாகப் பல அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். புதிய முதலமைச்சரின் முதல் விழாவிலேயே இத்தகைய சர்ச்சை வெடித்தது, சமூக ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறியது.

    English Summary

    Tamil Nadu Chief Minister Joseph Vijay met Prime Minister Narendra Modi at Seva Teerth to request an official Union Home Ministry clarification regarding the state song protocol. During their brief ten-minute meeting, CM Vijay urged the central government to resolve the controversy surrounding the seating arrangement and singing order of Tamil Thai Vazhthu, Vande Mataram, and the National Anthem during state functions. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய், அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நெறிமுறைகள் குறித்து விவாதித்தார்.