பாணிபூரியை கண்டுபிடித்தது மகாபாரத காலத்து திரௌபதி? கொஞ்சூண்டு கோதுமை மாவில்.. சுவாரஸ்ய பின்னணி என்ன?

  • டெல்லி: பாணிபூரியை அறிமுகப்படுத்தியது மகாபாரதத்தில் வரும் திரௌபதியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்மான கதையும் உள்ளது. தெருவுக்கு தெரு விற்கப்படும் இந்த பாணி பூரியில் அப்படி என்ன சுவாரஸ்ய கதை இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

    Advertisement

    அந்த காலகட்டத்தில் பள்ளி முடிந்து வீடுகளுக்கு வரும் பிள்ளைகளுக்கு அதிரசம், முறுக்கு, தட்டை, வடை, போண்டா, பஜ்ஜி, சுண்டல் உள்ளிட்ட தீனிகளே கொடுக்கப்பட்டன.

    Advertisement

    ஆனால் தற்போது பிரெஞ்ச் பிரைஸ், பர்கர், பீட்சா என குழந்தைகளின் ரசனைக்கேற்ப ஸ்னாக்ஸும் மாறிவிட்டது. அதிலும் பாணிபூரி முக்கிய பங்கு வகிக்கிறது. பாணி பூரி, பேல் பூரி, தயிர் பூரி, சமோசா பூரி, மசாலா பூரி என நிறைய ஐட்டங்கள் வந்துவிட்டன.

    மேலும் சன்னா மசாலா உள்ளிட்டவையும் கிடைக்கின்றன. இத்துடன் காளான் எனப்படும் ஒரு உணவும் விற்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட பாணி பூரிக்குத்தான் ஃபேன்ஸ் அதிகம்.

    சிறிய பூரிகளில் உருளைக் கிழங்கு மசாலாவை வைத்துவிட்டு அதில் புளி, உப்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி கலந்த பச்சை நிற தண்ணீரையும் வெங்காயத்தையும் சேர்த்து கொடுக்கும் போது ஒரே மடக்காக அதை வாயில் போட்டுக் கொண்டால் ஆஹா அற்புதமாக இருக்கும்.

    Advertisement

    இப்படிப்பட்ட பாணிபூரியின் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது, அதை பார்க்கலாம். இந்த சம்பவம் அமர்சித்ர கதையில் இடம்பெற்றுள்ளது. அதாவது பாண்டவர்கள் வனவாசத்திற்கும் பாணிபூரிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம்.

    திருமணமான புதிதில் தனது மருமகள் திரௌபதியின் திறனை சோதிக்க பஞ்ச பாண்டவர்களின் தாய் குந்தி தேவி நினைத்தாராம். அதற்காக கொஞ்சம் உருளைக்கிழங்கு மசாலா, ஒரே ஒரு சிறிய சப்பாத்தி செய்யும் அளவிற்கு மட்டுமே கோதுமை மாவையும் கொடுத்தாராம்.

    அப்போது "உன் கையில் கொடுத்துள்ள இந்த பொருட்களை வைத்து 5 பேரின் பசியை நீ ஆற்ற வேண்டும். அதே நேரத்தில் அவர்களுக்கு வயிறு நிறைந்து பசியும் என சொல்லக் கூடாது." என்றும் உத்தரவிட்டாராம். மாமியார் உத்தரவை மீறலாமா? உடனே திரௌபதி சமயோஜிதமாக யோசித்தாராம்.

    Advertisement

    சிறிய மாவை சிறு உருண்டைகளாக்கி, அதை எண்ணெயில் பொரித்து எடுத்து பூரிகளாக்கி அதில் உருளைக்கிழங்கு மசாலாவை திணித்து பஞ்ச பாண்டவர்களுக்கு பரிமாறினாராம். ஒரு சிறிய அளவிலான மாவை கொண்டு தனது மகன்களின் பசியை போக்கியமைக்காக அந்த உணவுக்கு அழிவே கிடையாது என குந்தி தேவி வரம் அளித்தாராம். அதனால்தான் அந்த பாணி பூரி நிலைத்திருக்கிறது என்கிறார்கள்.

    திரௌபதி செய்த பாணிபூரியை பார்த்து குந்தி தேவியே ஆச்சரியப்பட்டாராம். எனவே இன்று அனைவருக்கும் ஃபேவரைட்டாக இருக்கும் பாணி பூரி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருானது என்கிறார்கள். எனினும் சிலர் பாணிபூரி மகத வம்சத்தால் கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார்கள். அந்த உணவுக்கு புல்கி என பெயரிடப்பட்டதாம். ஆனால் இதை உருவாக்கியவர்கள் யார் என எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை என்கிறார்கள்.

    Advertisement

    திரௌபதி உருவாக்கினாரோ யார் உருவாக்கினாலும் சரி நமக்கு தேவை பாணிபூரி! நாக்கு ஊறுது! சாயங்காலம் 5 மணிக்கு கடை திறந்தும் போய் சாப்பிட்டுருவோமா?

    English Summary

    Do you know Pani Puri was invented 1000 years ago? Draupadi invented this for Pandavas.