நாடாளுமன்றத்தில் எழுப்பி உள்ளோம்.. உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து திமுக எம்பி வில்சன் பேட்டி

  • டெல்லி: முதலமைச்சர் விஜய் மீதான அவதூறு கருத்துகள் தொடர்பாக திமுக தலைவரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் கைது செய்ய விவகாரம் குறித்து திமுக எம்.பி. பி. வில்சன் கூறுகையில் "இது மாநில அரசின் அராஜகச் செயல்களில் ஒன்றாகும். ஆளும் தவெக அரசு விவசாயிகளின் மற்றும் தமிழக மக்களின் உரிமைகளுக்காகச் செயல்படாமல் தோல்வியடைந்துவிட்டதால், நேற்று திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.

    Advertisement

    மாற்றுக்கருத்துகளை ஒடுக்குவதிலேயே முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் எப்போதும் கவனம் செலுத்துகிறார் என்று உதயநிதி சுட்டிக்காட்டிய நிலையில், தற்போது அவர் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஆளும் தவெக அரசால் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன என்பதை நாடாளுமன்றத்திலும் நாங்கள் எழுப்பியுள்ளோம். சர்ச்சை பேச்சு எதுவும் பேசப்படவில்லை என்பது அந்தப் பேச்சைக் கேட்ட எவருக்கும் தெரியும். விவசாயிகளின் பிரச்சினையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே அரசே இத்தகைய செய்தியைப் பரப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை; உதயநிதி ஸ்டாலின் குறித்த இது ஒரு பொய்யான மற்றும் புனையப்பட்ட செய்தியாகும்." இவ்வாறு கூறினார்.

    Advertisement

    இதனிடையே திமுக இளைஞரணி வெளியிட்ட பதிவில் கூறுகையில், "திமுக கழக இளைஞர் அணிச்செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைக் கைது செய்த பாசிச த.வெ.க அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். காவிரி பிரச்சினைக்காக நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க அரசு மீது, மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் முன்வைத்த எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வக்கற்ற த.வெ.க அரசு, பொய்வழக்கு போட்டு தன் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

    எதிர்க்கட்சித்தலைவர் அவர்கள் யார் பெயரையும் குறிப்பிடாமல் காவிரி பிரச்சினை குறித்து பேசியதை, 'ஆபாசமாகப் பேசினார்', 'இரட்டை அர்த்தத்தில் பேசினார்' என்று திரிப்பது யார்?

    Advertisement

    'வாயில நல்லா வந்துடும்', 'கவர்ச்சி காட்ட நான் என்ன ....வா?', ஒரு டேஷும் இல்லை' என்று ஆபாசமாகப் பேசித்தள்ளும் டேஷ் டேஷ் முதலமைச்சர், தன் சொந்த கட்சிக்காரரையே 'ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அடிப்பேன்' என்று சொல்லும் அமைச்சர் ஜெகதீஸ்வரி, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தி மகளையும் ஆபாசமாக சித்திரித்த 'பலகட்சி மாறி' சி.டி.நிர்மல்குமார், நாள்தோறும் பாலியல் வழக்குகளில் கைதாகும் குற்றவாளிகளின் கூடாரமான த.வெ.க - இந்த கும்பல்தான் திடீர் 'ஆபாச எதிர்ப்பு போராளி'களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.

    சோபாமாடல் முதலமைச்சர் விஜய்யின் படங்களிலும் பாடல்களிலும் உள்ள இரட்டை அர்த்த வரிகள், ஆபாசக்காட்சிகளைத் தொகுத்தால் அது மாபெரும் ஆபாச குடோனாக இருக்குமே! அரசியலுக்கு வந்து கடைசிப்படம் என்று அறிவித்த திரைப்படத்திலும் வாய் கூசாமல் கெட்டவார்த்தை பேசிய விஜய்தான் ஒழுக்க காவலரா?

    Advertisement

    இதே விஜய்யை நேரடியாக ஒரு நடிகையுடன் இணைத்துப் பேசிய பா.ஜ.க மாநிலச்செயலாளர் நயினார் நாகேந்திரனுக்கு கண்டனம்கூட தெரிவிக்காத த.வெ.க இப்போது எதிர்க்கட்சித் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.'மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை' என்று சொன்ன பா.ஜ.க அரசின் அமைச்சரைக் கண்டித்து, டெல்லிக்குப் போராடச் சென்ற விவசாயிகளைக் கைது செய்த மகாராஷ்டிரா காவல்துறையைக் கண்டித்து, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநர்- ஒன்றிய அரசைக் கண்டித்து எல்லாம் போராடத் துணியாத த.வெ.க, எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக மட்டும் போராடுகிறது.

    நேற்று புகார், இன்று எதிர்க்கட்சித் தலைவரைக் கைது செய்ய அவசர முயற்சி!

    Advertisement

    'குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளைக் காப்பாற்றியவர்' என்று பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றம் சாட்டியும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத பாசிச த.வெ.க அரசு, அவசர அவசரமாக எதிர்க்கட்சித் தலைவரைக் கைதுசெய்கிறது.

    அரைநூற்றாண்டு உரிமைப்போராட்டத்தை பின்னுக்குத் தள்ளி காவிரி பிரச்சினையில் கையாலாகாத்தனமாக செயல்பட்ட த.வெ.க அரசின் மீது எதிர்க்கட்சித்தலைவர் முன்வைத்த எந்த குற்றச்சாட்டுகளுக்காகவது பதில் சொல்ல திராணி இருக்கிறதா?

    நாளை தொடங்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எழுப்பப்போகும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமுடியாது என்ற அச்சத்தில் கைது செய்திருக்கும் பாசிச த.வெ.க அரசே!

    Advertisement

    கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது. எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க. பாசிச த.வெ.க அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    English Summary

    Delhi: On DMK leader and LoP, Udhayanidhi Stalin detained by police over his alleged defamatory remarks against CM Vijay, DMK MP P Wilson says, "This is one of the atrocious acts of the state government.