இனி நாயுடு ஆதரவு முக்கியமில்லை.. கச்சிதமாக காய் நகர்த்திய மோடி.. ஏமாற்றத்தில் ஆந்திர முதல்வர்!

  • டெல்லி: இந்தாண்டு மேற்கு வங்கத்தில் நடந்து ஒரு சம்பவம் தேசிய அரசியலையே புரட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். திரிணாமுல் கட்சியில் இருந்து பிரிந்து போன எம்பிக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது பாஜகவுக்கு நல்லது என்றாலும் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரிய சிக்கலை கொடுத்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    2024 லோக்சபா தேர்தலுக்கு பிறகு.. பாஜகவுக்கு மத்தியில் ஆட்சி அமைப்பது முன்பை விட சவாலானதாக மாறியது. 543 தொகுதிகள் கொண்ட லோக்சபாவில் மோடி தலைமைக்கு முதல்முறையாக பெரும்பான்மை கிடைக்காமல் போனது. பாஜகவால் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

    Advertisement

    பாஜக

    2014, 2019 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைத்த பாஜகவுக்கு இந்த முறை மேஜிக் நம்பர் 272 கிடைக்கவில்லை. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு முன்பை விட முக்கியமானதாக மாறியது. குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முக்கியமான தலைவராக உருவெடுத்தார்.

    சந்திரபாபு நாயுடு

    அவரிடம் 16 லோக்சபா உறுப்பினர்கள் இருந்த நிலையில், அது முக்கியமானதாக மாறியது. நாயுடுவின் ஆதரவு மத்திய அரசின் நிலைத்திருக்க முக்கியம் என்ற நிலை உருவானது. மத்திய அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சகம், அதுவும் சிவில் ஏவியேஷன் துறை தான் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக ஒதுக்கியது. ஆனாலும், ஆந்திர பிரதேசத்துக்கான நிதி மற்றும் புதிய தலைநகரை உருவாக்க சிறப்பு நிதி என பல்வேறு கோரிக்கைகளை நாயுடு வலியுறுத்தினார். அதில் பல விஷயத்தை மத்திய பாஜக அரசு செய்தும் கொடுத்தது.

    Advertisement

    மேற்கு வங்கம்

    ஆனால், இந்த அரசியல் கணக்கு 2026 மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு பிறகு மாறியது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஆளும் கட்சியாக அசுர பலத்தில் தேர்தலை சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வென்றது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியே தோல்வி அடைந்தார். இதனால், கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிராக கலகம் செய்தனர்.

    தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸின் எம்பிக்கள் பலரும் அக்கட்சியில் இருந்து விலக முடிவு செய்தனர். கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின்படி, ஒரு கட்சியிலிருந்து பிரிந்து செல்லும் எம்பிக்கள் தகுதி நீக்கத்தை தவிர்க்க குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் திரிணாமுலுக்கு 28 மக்களவை எம்பிக்கள் இருந்த நிலையில், குறைந்தது 19 பேர் தேவைப்பட்டனர்.

    Advertisement

    நிலைமை மாறியது

    இந்த சூழலில் 20 எம்பிக்கள் ஒன்றிணைந்து தனி அணியாக செயல்பட தொடங்கினர். அவர்கள் கடந்த ஜூன் மாதம் பெரிதும் அறியப்படாத நேஷனலிஸ்ட் சிட்டிசன்ஸ் பார்டி ஆஃப் இந்தியா என்ற பிராந்தியக் கட்சியுடன் இணைந்தனர். இதன் மூலம் ஒரே நாளில் 20 எம்பிக்களுடன் NCPI, லோக்சபாவில் 5வது பெரிய கட்சியாகவும், பாஜக கூட்டணியில் 2வது மிக பெரிய கட்சியாகவும் மாறியது. அதாவது தெலுங்கு தேசம் கட்சியை விட இந்த NCPI கட்சிக்கு 4 எம்பிக்கள் கூடுதலாக உள்ளனர்.

    நாயுடு பவர் காலி

    இது பாஜகவுக்கு நல்லது என்றாலும் சந்திரபாபு நாயுடுவுக்கு பின்னடைவு தான். இனி நாயுடுவின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும் என்று இல்லை என்பதால் அவரால் முன்பை போல ஸ்பெஷல் திட்டங்களை கேட்டு பெற முடியாது. இனி எந்த ஒரு கூட்டணி கட்சியின் ஆதரவை இழந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு பாஜகவுக்கு கூடுதல் நாடாளுமன்ற பலம் கிடைத்துள்ளது.

    Advertisement

    இதனால் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து முக்கிய கூட்டணி தலைவராக இருந்தாலும், என்டிஏ அரசு அவரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை மாறிவிட்டது. மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் மாநில அரசியலைத் தாண்டி டெல்லியின் அதிகார கணக்கையும் மாற்றக்கூடியதாக அமைந்துள்ளது என்பதே உண்மை!

    English Summary

    A major political shift in West Bengal has strengthened the BJP's numbers in Parliament(பாஜகவுக்கு கிடைத்த பலத்தால் சந்திரபாபு நாயுடு ஏமாற்றம்): Chandrababu Naidu leverage within the NDA government reduced.