அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது

  • டெல்லி: தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவதில் குழப்பம் நீடிக்கிறது. அமித் ஷா உள்ளிட்ட டெல்லி மேலிடத் தலைவர்களை அண்ணாமலை நேற்று சந்தித்துப் பேசியுள்ள நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விவரங்களை நாம் பார்க்கலாம்!

    Advertisement

    கடந்த சில நாட்களாக அண்ணாமலை டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் நிதின் நபின் மற்றும் அமைப்பாளர் பி.எல். சந்தோஷ் ஆகிய டெல்லி மேலிடத் தலைவர்களை அண்ணாமலை தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். தமிழக பாஜகவின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் தோல்வி குறித்து அவர் தனது அடுக்கடுக்கான புகார்களை மேலிடத்தில் கொட்டியதாகத் தெரிகிறது.

    Advertisement

    அண்ணாமலை

    அண்ணாமலை மேலிடத் தலைவர்களிடம் முக்கியமாக இரண்டு விஷயங்களை முன்வைத்துள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் தேர்தல் தோல்விக்கான காரணம். சமீபத்தில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெறும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த மோசமான தோல்விக்கு அதிமுகவுடன் வைத்த கூட்டணிதான் காரணம் என்று அண்ணாமலை வாதிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக தனித்து நின்று தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அண்ணாமலை ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தார். ஆனால், அண்ணாமலையைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கூட்டணி என்று அதிமுக அடம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை நீக்கப்பட்டு, அதிமுகவுடன் கூட்டணியும் அமைக்கப்பட்டது.

    Advertisement

    அதிருப்தி

    தமிழக பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த சில முக்கியத் தலைவர்களின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறை தனக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அண்ணாமலை ஓப்பனாகப் பேசியுள்ளார். அண்ணாமலையின் இந்த அதிருப்தியைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லிக்கு வருமாறு பாஜக தலைமை சம்மன் அனுப்பியுள்ளது.. அவரிடமும் இந்த விவகாரங்கள் குறித்து டெல்லியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    ராஜ்யசபா எம்பி

    அண்ணாமலை பாஜகவில் தனக்கான எதிர்காலம் இருப்பதாகக் கருதவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, டெல்லி மேலிடம் அவருக்கு வழங்க முன்வந்த ராஜ்யசபா எம்பி பதவியை அவர் மறுத்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், நேற்றைய கூட்டத்தில் அண்ணாமலையின் ராஜினாமா குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், அவர் இன்னும் முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுக்கவில்லை என்றும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன.

    Advertisement

    புதிய அரசியல் கட்சி

    பாஜகவில் இருந்து விலகினாலும், தமிழக அரசியலை விட்டு விலகும் எண்ணத்தில் அண்ணாமலை இல்லை. தமிழகத்தில் மிக விரைவில் ஒரு பிரம்மாண்ட மக்கள் இயக்கத்தை அவர் தொடங்க உள்ளாராம். இது தொடர்பாகவும் அவர் பாஜக தலைமையிடம் கூறியதாகத் தெரிகிறது. முதலில் ஒரு சமூக இயக்கமாகத் தொடங்கி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் தொண்டர்களைத் தன் பக்கம் இழுத்து வலுவான அமைப்பை உருவாக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவர் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளார்.

    மேலும், தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இந்த நேரடியாகக் களம் கண்டு, தனது பலத்தை நிரூபிக்க அண்ணாமலை திட்டமிட்டு வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    English Summary

    Former TN BJP chief Annamalai met Union Minister Amit Shah and top leaders in Delhi to discuss election losses(அண்ணாமலை அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன): Annamalai Amit Shah meeting latest news in tamil.