கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு.. வெளிநாடுகளில் இருந்து ஆதரவு? திடீரென பக்கங்கள் முடக்கப்பட்டது ஏன்!

  • டெல்லி: இப்போது அரசியல் களம் நாம் எதிர்பாராத பல மாற்றங்களைச் சந்திக்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தமிழ்நாடு, மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளே உதாரணங்கள். இது ஒரு பக்கம் இருக்க.. திடீரென உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இணையத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் தேசிய அரசியல் கட்சிகளையும் கூட இது பின்னுக்குத் தள்ளிவிட்டது.

    Advertisement

    கடந்த சில நாட்களாகவே இணையத்தில் எங்கு திரும்பினாலும் ஒரு புதிய அரசியல் கட்சி தொடர்பாகவே பேச்சு இருக்கிறது. அதுதான் சிஜேபி எனப்படும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சொன்னதாகப் பரவிய தகவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இதனை உருவாக்கினார்கள். தலைமை நீதிபதி தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறினாலும் கூட அதற்குள் இந்தக் கட்சி டிரெண்டாகிவிட்டது.

    Advertisement

    டிஜிட்டல் இயக்கம்

    இந்த டிஜிட்டல் இயக்கம் தான் தற்போது நாட்டின் அரசியல் வட்டாரங்களிலேயே மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக இந்த அரசியல் கட்சி வளர்ந்துள்ளது. இந்தக் காலத்து இளைஞர்கள் இன்ஸ்டாவிலேயே தங்கள் பெரும்பான்மை நேரத்தைச் செலவிடும் சூழலில், கரப்பான் பூட்சி கட்சிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது கவனிக்க வைப்பதாக மாறியுள்ளது. இது பாஜகவின் பலோயர்ஸ்களை விட அதிகமாகும். ட்விட்டரிலும் கூட இந்தக் கரப்பான் பூட்சி கட்சி வேகமாகவே வளர்த்து பலரது கவனத்தையும் தொடர்ந்து ஈர்த்தே வருகிறது.

    கரப்பான் பூச்சி கட்சி

    இதற்கு நடுவே இந்தக் கரப்பான் பூச்சி கட்சியின் ட்விட்டர் பக்கம் முடக்கபட்டது. எக்ஸ் தளத்தில் இந்த சிஜேபி கணக்கு தொடங்கப்பட்ட 4 நாட்களில், சுமார் 2 லட்சம் ஃபாலோயர்களைக் கடந்த உடனே, இந்திய அரசின் சட்டப்பூர்வ உத்தரவின்படி இந்தியாவில் இந்தக் கணக்கு முடக்கப்பட்டது. இருப்பினும், எதற்காக இந்தப் பக்கம் முடக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் அபிஜீத் திப்கே 'Cockroach Is Back' என்ற புதிய கணக்கைத் தொடங்கினார். அந்தப் பக்கத்தையும் கூட இளைஞர்கள் மிக அதிகளவில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

    Advertisement

    சர்ச்சை

    அதேநேரம் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள் குவிந்ததால், இந்த கணக்கின் நம்பகத்தன்மை குறித்துப் பலரும் ஆராயத் தொடங்கியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் திடீரென ஏற்பட்ட இந்த 1,400% ஃபாலோயர்ஸ் அசுர வளர்ச்சிக்குப் பின்னால், வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் பாட்கள் மற்றும் அல்காரிதம் முறைகேடுகள் ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் பலரும் எழுப்பிவருகிறார்கள்.

    பின்னணியில் யார்

    இணையத்தையே ஆட்டிப்படைக்கும் இந்த 5 நாட்களே ஆன 'காக்ரோச் ஜனதா கட்சி' இணைய இயக்கத்திற்குப் பின்னணியில் இருப்பவர் அபிஜீத் திப்கே.. மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த இவர், அரசியல் கம்யூனிக்கஷேன் உத்தி வகுப்பாளராக இருக்கிறார். தற்போது அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் முதுகலை படித்து வருகிறார். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியிலும் சமூக வலைத்தள உத்தியாளராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது!

    Advertisement

    ட்விட்டர் தளத்தில் ஏற்பட்டுள்ளது ஒரு சிறிய சறுக்கல் தான்.. ஆனால், வெறும் 5 நாட்களில் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளையும், ஐடி விங்கையும் இந்த கரப்பான்பூச்சி ஆன்லைனில் அலறவிட்டு இருக்கிறது. இது 2026-ன் மிக பெரிய சோஷியல் மீடியா ட்ரெண்ட் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை!

    English Summary

    Trending satirical movement 'Cockroach Janta Party' was suspended in India after gaining 2 lakh followers(புதிதாக உருவாகியுள்ள கரப்பான் பூச்சி அரசியல் கட்சி): All things to know about Cockroach Party.