இந்தியாவை அலறவிடும் கரப்பான் பூச்சி கட்சி! மாஸ்டர்மைண்ட் அபிஜித் திப்கே யார் தெரியுமா? பகீர் பின்னணி

  • டெல்லி: தற்போது இந்தியாவில் பெரும் பேசும் பொருளாக இருப்பது என்னவென்றால் அது 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்பது தான். சமூகவலைதளங்களில் பாஜகவை தாண்டி தொடர்ந்து பாலோவர்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் இந்த பக்கத்தை அதிகமாக பின்தொடரும் நிலையில் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யின் பின்னணியில் இருக்கும் அபிஜித் திப்கே என்பவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    Advertisement

    தற்போது நம் நாட்டில் 'டாக் ஆப் தி டவுன்' ஆக இருப்பது என்னவென்றால் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தான். ஆங்கிலத்தில் CJP அல்லது Cockroach Janta Party என்று அழைக்கப்படுகிறது. நம் நாட்டில் சமூக வலைதளங்களில் அதிகமானவர்கள் பாஜகவை பின்தொடர்ந்து வருகின்றனர்.

    Advertisement

    ஆனால் தற்போது பாஜகவை முந்தி இந்த கட்சிக்கான பாலோவர்ஸ் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றனர். இதுதான் தற்போது பேசும் பொருளாக உள்ளன. இந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் பின்னணி பற்றி பலரும் தேடி வரும் நிலையில் அதுபற்றி இங்கு பார்க்கலாம்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

    இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் போலி சான்று தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்தார். விசாரணையின்போது கூறிய கருத்து விவாதத்தை கிளப்பியது. ''இப்போது கரப்பான்பூச்சி, ஓட்டுண்ணிகளை போல் வேலையில்லாத சில இளைஞர்கள் சமூக ஊடகங்கள் மூலமாக ஊடகவியலாளர்கள் போலவும், சமூக ஊடக ஆர்வலர்களாக தங்களை காட்டிகொண்டு அனைவரையும் விமர்சனம் செய்து தாக்கி பேசி வருகின்றனர்'' என்று கூறினார். இதற்கு சமூக வலைதளங்களில் இருப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    இதையடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், ''அனைத்து இளைஞர்களையும் நான் கூறவில்லை. போலி சான்று வைத்திருப்போரை மட்டுமே கூறினேன் '' என்று விளக்கம் அளித்தார்.

    உருவானது 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'

    இருப்பினும் அவரது கருத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர்கள் இளைஞர்களை கரப்பான்பூச்சியுடன் எப்படி ஒப்பிடு செய்ய முடியும் என்று கூறி வருகின்றனர்.

    இதற்கிடையே தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கரப்பான்பூச்சி சார்ந்த கருத்தை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் கடந்த 16ம் தேதி உருவானது. அதன் பெயர் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta party).

    Advertisement

    குவியும் இளைஞர்கள்

    மதச்சார்பற்ற, சோசியலிச, ஜனநாயக, சோம்பேறி என்பதுதான் இந்த கட்சியின் கொள்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோம்பேறிகள்மற்றும் வேலையில்லாதவர்களாின் குரலாக இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. வேலை இல்லாதவர்கள், சோமபேறிகள், அதிகமாக இணையதளங்களை பயன்படுத்துவோர் கட்சியில் சேரலாம் என கூறியிருந்தது.

    அதுமட்டுமின்றி நீட் தேர்வு வினாக்கள் முன்கூட்டியே வெளியானது, இளைஞர்களுக்கு உள்ள பிரச்சனை, வேலைவாய்ப்பு இல்லாமை உள்ளிட்டவற்றை மையப்படுத்தி மீம் மற்றும் அனிமேஷன் வடிவில் பதிவுகள் செய்யப்பட்டன. இதனால் இந்த சமூக வலைதள பக்கத்தை அதிகமானவர்கள் பின்தொடர தொடங்கினர்.

    முடக்கப்பட்ட பக்கம்

    நம் நாட்டில் சமூக வலைதளங்களில் பாஜக அதிக பாலோவர்களை வைத்துள்ளது. ஆனால் அதனை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராமில் அந்த பக்கத்தை 19 மில்லியனுக்கும் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) அதிகமானவர்கள் பின்தொடர்ந்தனர். எக்ஸ் வலைதளத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்தனர்.

    Advertisement

    குறிப்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த பக்கங்கைள ஃபாலோ செய்ய தொடங்கினர். இதற்கிடையே தான் இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டன.

    யார் இந்த அபிஜித் திப்கே?

    இதற்கு தற்போது எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அனைவருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இந்த 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யை தொடங்கியது யார்? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக மாறி உள்ளது.

    அதாவது இந்த கட்சியை தொடங்கியவரின் பெயர் அபிஜித் திப்கே. மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இவர் புனேவில் ஜார்னலிசம் படிப்பை முடித்தார். அதன்பிறகு மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் ரிலேஷன் என்ற துறையில் மாஸ்டர் படிப்பை படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் அபிஜித் திப்கே தான் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யின் நிறுவனர் ஆவார்.

    Advertisement

    ஆம்ஆத்மி கட்சியில் செயல்பட்டவர்

    இவர் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் செயல்பட்டார். ஆம்ஆம்தி கட்சியில் 2020ம் ஆண்டு முத்ல 2023ம் ஆண்டு வரை தீவிரமாக இயங்கி வந்தார். கட்சியின் சமூக வலைதள பிரிவில் தன்னார்வலராக சேர்ந்து செயல்பட்டு வந்தார்.

    2020 சட்டசபை தேர்தலில் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். ஆம்ஆத்மி கட்சிக்கு டிஜிட்டல் பிரசாரத்தின் மூலமாக மீம் அடிப்படையிலான விஷயங்களை சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்தார். அந்த தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    அமெரிக்காவில் மேல்படிப்பு

    தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் இளைஞர்களை ஒருங்கிணைப்பு செய்வது தான் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் சமீபத்தில் இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் அந்த நாட்டின் அரசுகள் கவிழ்க்கப்பட்டன.

    இதன் பின்னணியில் சமூக வலைதளங்கள் வழியாக இளைஞர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டது தான் முக்கிய காரணம். அண்டை நாடுகளில் நேர்ந்த வன்முறை போல் இந்தியாவிலும் பிரச்சனையை ஏற்படுத்த சில துடித்து வரும் நிலையில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' திடீரென டிரெண்ட்டாகிறது. இதனால் தான் அந்த கட்சியின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Cockroach Janta Party Founder: Currently, the talk of the town in India is the ‘Karappanpoochi Janta Party' (Cockroach Janta Party). On social media platforms, its follower count has been steadily rising-even surpassing that of the BJP. However, this page-which had garnered a massive following, particularly among the youth-has now been suspended. Sensational details have emerged regarding the identity and background of Abhijit Dipke, the individual behind this ‘Cockroach Janta Party.'