டெல்லி: நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக டெல்லியில், காக்ரோச் ஜனதா கட்சி (CJP) மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருந்தது. மொத்த நாடே திரும்பி பார்க்கும் அளவுக்கு போராட்டத்தின் தாக்கம் இருந்தாலும்.. டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஏபிவிபி அமைப்புதான் ஜெயித்திருந்தது. மத்திய அரசை பணிய வைத்த போராட்டம் நடத்திய CJP அமைப்பால் ஏன்? இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த தேர்தலில் CJP நேரடியாக பங்கேற்கவில்லை. இருப்பினும் CJP போராட்டம்.. மாணவர்களை இடதுசாரி இயக்கங்களை நோக்கி நகர்த்தும், தேர்தலில் இந்த போராட்டம் எதிரொலிக்கும் என்றுதான் கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
டெல்லி பல்கலைக்கழகத்தில் 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. இந்த அனைத்து கல்லூரிகளிலும் தேர்தல் நடைபெறும். மொத்தம் 1.3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இதில் வாக்களிப்பார்கள். ஒவ்வொரு தனிப்பட்ட கல்லூரியிலும் ஏபிவிபி மற்றும் காங்கிரஸின் மாணவர் அமைப்பான NSUI அமைப்புக்கு நேரடியாக கிளைகள் இருக்கும். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கல்லூரிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, வார்டு வாரியாக தேர்தல் வேலைகள் நடப்பது போல மிக துல்லியமாக வேலைகள் பிரிக்கப்படுகின்றன. டெல்லி முழுவதும் பல்கலைக்கழக, கல்லூரி சுவர்களில் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் டன் கணக்கில் அச்சிடப்பட்டு ஒட்டப்படும். இந்த அமைப்புகளுக்கு தனியாக சமூக ஊடக மேலாளர்கள் மற்றும் ஐடி செல்கள் மூலம் ஆயிரக்கணக்கான வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படும். அதைவிட முக்கியமான விஷயம், இன்னைக்கு டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள மாநிலங்களில் எம்பி, எம்எல்ஏக்களாக இருப்பவர்களில் சிலர் DUSU கல்லூரிகளில் படித்தவர்களாகதான் இருப்பார்கள். இந்த முன்னாள் மாணவர்கள் தாங்கள் சார்ந்துள்ள அமைப்புகளுக்கு ஆதரவாக நேரடியாக கல்லூரிகளுக்கே வந்து பிரச்சாரம் செய்வார்கள். மொத்தத்தில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களை போல.. DUSU தேர்தல் மிக நேர்த்தியாக நடக்கும். வழக்கமாக DUSU தேர்தலில் ABVP அல்லது NSUI இந்த இரண்டு அமைப்புக்கும் இடையேதான் போட்டி இருக்கும். இந்த தேர்தலில் ABVP வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிதான் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. CJP நடத்திய போராட்டம் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லையா? என்று பலரும் கேள்வி கேட்கின்றனர். உண்மை என்னவெனில், எதிர்கட்சிகள்.. அதாவது இடதுசாரி மாணவர் அமைப்புகளான SFI-AISA இவை காங்கிரஸுடன் (NSUI) கை கோர்க்கவில்லை. காங்கிரஸ் மாணவர் அமைப்பு மட்டுமல்லாது ஆம் ஆத்மி கட்சியின் ASAP போன்ற மாணவர் அமைப்புகளுடனும் இணையவில்லை. இப்படி எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியிருப்பதால், வலதுசாரி சித்தாந்தம் கொண்ட.. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ABVP அமைப்பு எளிதாக வெற்றி பெற்றுவிட்டது. ABVPக்கு பெரிய வாக்கு சதவிகிதம் எல்லாம் கிடையாது. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது. அதேபோல, ABVP அமைப்பு வலுவான உட்கட்டமைப்பை கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கான தேர்தல் வியூகத்தை நேரடியாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள்தான் வகுத்து கொடுக்கும். அதேபோல தேர்தலை எதிர்கொள்ள தேவையான பண பலத்தையும் இது பார்த்துக்கொண்டது. பண பலம், தேர்தல் வியூகம், சரியாக திட்டமிடப்பட்ட சோஷியல் மீடியா பிரச்சாரம், ஐடி செல், கல்லூரி வாரியாக யூனிட்கள்.. இவ்வளவு பெரிய கட்டமைப்பை.. டெல்லியில் நடந்த GenZ போராட்டம் மட்டும் தோற்கடித்துவிடாது. ஆக இதுதான் DUSU தேர்தலில் ஏபிவிபி வெற்றிக்கு காரணம்.DUSU தேர்தல்
நேர்த்தியான தேர்தல்
அமைப்பின் பலம்
யார் ஆதிக்கம் செலுத்துவார்கள்?
வெற்றிக்கான காரணம்