சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவது ஏன் தெரியுமா? சுவாரசிய பின்னணி

  • டெல்லி: நாளை நம் நாட்டின் 80வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் ஒவ்வொரு முறை சுதந்திர தினத்தன்றும் நம் நாட்டின் பிரதமர்கள் டெல்லி செங்கோட்டையில் மட்டுமே தேசியக்கொடி ஏற்றுவது ஏன்? எதற்காக சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்வுக்கு செங்கோட்டை தேர்வு செய்யப்பட்டது? என்பது பற்றிய சுவாரசிய பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    நாளை ஆகஸ்ட் 15. ஆங்கிலேயர்களிடம் இருந்து நம் நாடு விடுதலை பெற்ற நாள். பல ஆயிரம் இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டு உயிர் தியாகம் செய்து இந்தியாவை சுதந்திர நாடாக அறிவித்த தினம் தான் ஆகஸ்ட் 15. இதனால் நாளை அனைவரும் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது அவசியம்.

    Advertisement

    நாளை நாம் 80வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார். அதன்பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த

    ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் டெல்லி செங்கோட்டை கவனம் பெறும். இதற்கு முக்கிய காரணம் அங்கு தான் நம் நாட்டின் பிரதமர் தேசியக்கொடி ஏற்றுவார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் ஒவ்வொரு முறையும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் ஏன் பிரதமர் கொடி ஏற்றுகிறார்? என்று யோசித்து இருக்கிறீர்களா? இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    இந்தியா சுதந்திரமடைந்த பிறகு முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு செயல்பட்டார். கடந்த 1947ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு தான் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நேரு தேசியக்கொடி ஏற்ற தேர்வு செய்த இடம் தான் செங்கோட்டை. அதனை அதற்கு பின்னால் வந்த பிரதமர்கள் மாற்றவில்லை. நேருவை பின்பற்றி செங்கோட்டையிலேயே தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர். பிரதமர் மோடியும் அந்த வழக்கத்தையே பின்பற்றி வருகிறார்.

    மேலும் இந்த செங்கோட்டை சிவப்பு மண்கல்லால் கட்டப்பட்டது. இதில் உள்ள சிவப்பு நிறம் சுதந்திர போராட்டத்தில் நம் முன்னோர்கள் செய்த உயிர் தியாகங்களை நினைவூட்டும் வகையில் உள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலையும் தனது காதலி மும்தாஜ் நினைவாக கட்டிய முகலாய மன்னர் ஷாஜஹான் தான் இந்த செங்கோட்டையையும் கட்டினார்.

    Advertisement

    டெல்லியில் ஷாஜஹான் வலிமையான மற்றும் கம்பீரமான கோட்டையை கட்ட விரும்பினார். இந்த விருப்பம் தான் 17ம் நூற்றாண்டில் கம்பீரமான செங்கோட்டையை உருவாக்கியது. இந்த கோட்டைக்கு சிவப்பு நிற மண்கற்கள் பயன்படுத்தப்பட்டது. இதனாலே செங்கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இது ஷாஜகானின் பாதுகாப்பிற்காக மட்டுமின்றி அவரது கால கட்டக்கலையின் வலிமையை வெளிப்படுத்தும் இன்று வரை பறைசாற்றி வருகிறது.

    இந்த செங்கோட்டை முகலாய மன்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் அரச இல்லமாக முதலில் இருந்தது. கோட்டை வளாகத்திற்குள் அழகான தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது மன்னர் குடும்பத்தினர் ஓய்வெடுக்கவும், பொழுதுபோக்கும் இடமாக இருந்தது. இதுதவிர முக்கியமான மன்னர் குடும்ப நிகழ்ச்சிகளில் இந்த செங்கோட்டையில் நடந்தது. மன்னராட்சி மறைந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தற்போது செங்கோட்டை சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றும் இடமாக மாறி உள்ளது.

    English Summary

    Tomorrow, our country will celebrate its 80th Independence Day with great enthusiasm. Prime Minister Modi is set to hoist the national flag at the Red Fort in Delhi and address the nation. This is a well-known fact. However, let us explore the interesting background behind why our Prime Ministers hoist the national flag at the Red Fort in Delhi on every Independence Day, and why the Red Fort was chosen for this event.