அப்போவே ஜனாதிபதி கிட்ட போய் இருக்கணும்! இப்போ வந்து புலம்பலா? ECI ஆணையர்களுக்கு நிபுணர்கள் கேள்வி!

  • டெல்லி: தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும், நாங்கள் இது குறித்து பலமுறை அதிருப்தி தெரிவித்திருக்கிறோம் என்றும் தேர்தல் ஆணையர் இருவர் கூறியிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் அப்போதே ஜனாதிபதியிடம் போயிருக்க வேண்டும் என்றும், அதைவிட்டுவிட்டு இப்போது வந்து புலம்புவது ஏன்? என்று ஆணையர்களுக்கு நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    Advertisement

    தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகிய இருவரும், கடந்த 10 மாதங்களில் சுமார் 14 முறை தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்திருக்கின்றனர்.

    Advertisement

    ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ECINet மூலம் வாக்காளர் பட்டியல் டேட்டாபேஸ் அனைவருக்குமானதாக மாற்றுவதற்கும், கள அதிகாரிகளின் அதிகாரம் குறைக்கப்படுவதற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதெல்லாம் தலைமை தேர்தல் அதிகாரி, யாரிடமும் ஆலோசிக்காமல் எடுத்த முடிவு என்று ஆணையர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

    ஜூலை 29 அன்று தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கண்காணிப்பு அடுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இவ்விரு ஆணையர்களும் அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநதனுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

    இங்கிருந்துதான் பிரச்சனையே தொடங்குகிறது. அதவாது தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அரசியலமைப்பு என்பதால், ஆணையர்கள் அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியது ஏன் என்று? நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆணையர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது எனில், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு முடிவை எதிர்த்திருந்தால்.. பெரும்பான்மை அடிப்படையில் அதை அவர்களாலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    Advertisement

    எனவே இந்த விஷயத்தில் ஆணையர்கள் தனித்தனியாக புகார் அளித்தார்களாக? அல்லது கூட்டாக எதிர்த்தார்களா? என்ற தெளிவான விவரம் தேர்தல் ஆணையம் விளக்கினால் மட்டுமே தெரிய வரும் என்றும் கூறியுள்ளனர்.

    அதேபோல, தேர்தல் ஆணைய முடிவுகள் சட்டவிரோதமானவை என்று இந்த இரண்டு ஆணையர்களும் கருதினால், அவர்கள் ஏன் தேர்தல் ஆணையத்தின் முழுக்குழு கூட்டத்தை கூட்டவில்லை? என்கிற கேள்வியும் எழுகிறது. இல்லையெனில் குடியரசுத் தலைவரை அணுகியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

    இவ்வளவு ஆப்ஷன்களை விட்டுவிட்டு அமைச்சரவை செயலாளருக்கு எதற்காக கடிதம் எழுத வேண்டும்? அவர் என்ன ஆணையத்தின் மேல் அதிகாரியா? எனவே இந்த குளறுபடிகளுக்கு ஒட்டுமொத்த தேர்தல் ஆணையமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Advertisement

    மொத்தத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது எழுப்பப்படும் புகார்களுக்கு மத்தியில், சந்து மற்றும் ஜோஷி ஆகிய இரு ஆணையர்களும் தங்களுக்கு இருக்கும் தன்னாட்சி அதிகாரங்களை பயன்படுத்தி முழுக்குழு கூட்டத்தை கூட்டாமலும், குடியரசுத் தலைவரை அணுகாமலும் ஏன் அமைச்சரவை செயலாளரிடம் முறையிட்டார்கள் என்பதே இப்போதைய கேள்வி.

    Topics: #eci #india

    English Summary

    ECs approach President: Statements by two Election Commissioners—alleging that Chief Election Commissioner Gyanesh Kumar makes unilateral decisions and noting that they have repeatedly expressed dissatisfaction regarding this—have sparked a debate. However, experts have questioned why the commissioners are complaining now instead of having approached the President about the matter at the time.