ரஷ்யாவா இப்படி பேசுது! இந்தியாவிற்கு எதிராகும் வகையில் திடீரென ஸ்டேட்மெண்ட்.. என்ன நடக்குறது?

  • டெல்லி: இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவது உலக அளவில் தொடர்ந்து பேசப்படும் ஒரு முக்கிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், இந்தியா ஏன் தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குகிறது என்று பல கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றன.

    Advertisement

    இந்தச் சூழலில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் மிகத் தெளிவான ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

    Advertisement

    தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் பேசியதாவது, "இந்தியா ரஷ்யாவுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த எண்ணெயை வாங்கவில்லை. தனது நாட்டின் வளர்ச்சிக்கும், தனது நாட்டு மக்களின் நலனுக்கும் மட்டுமே இந்தியா இதை வாங்குகிறது. தன் மக்களின் தேவையை மனதில் வைத்துதான் இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது" என்று அவர் கூறினார்.

    வெளிநாட்டு அழுத்தங்களுக்குப் பணியாத இந்தியா

    செய்தி நிறுவனமான ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் பேசிய அலிபோவ், இந்தியா தனது சொந்த நலனைப் பாதுகாப்பதில் எப்போதுமே உறுதியாக நிற்பதாகத் தெரிவித்தார். அவங்க சொந்த நலத்திற்காகவே எண்ணெய் வாங்குகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து என்னதான் நெருக்கடிகள் வந்தாலும், இந்தியா தனது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை விட்டுக் கொடுக்காது என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். இந்தியா தன் சொந்த காலில் நின்று தனது உரிமைகளைக் காக்கும் திறன் கொண்டது, என்றார்.

    Advertisement

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளையும், கூடுதல் வரிகளையும் விதித்து வருகின்றன. இதைக் கடுமையாக விமர்சித்த அலிபோவ், "நேர்மையான முறையில் வர்த்தகப் போட்டி போடுவதற்குப் பதிலாக, மற்ற நாடுகளை அச்சுறுத்தும் வழியை மேற்கத்திய நாடுகள் கையில் எடுத்துள்ளன. எங்களை விடக் குறைந்த விலையில் இந்தியாவிற்கு எண்ணெய் கொடுப்பதற்கு அந்த நாடுகளுக்கு என்ன தடை? ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாது. குறைந்த விலையில் எண்ணெய் தர முடியாத காரணத்தினால்தான், அவர்கள் மிரட்டல் நடவடிக்கைகளில் இறங்குகிறார்கள்" என்று சாடினார். மேலும், இந்தியாவிற்கு எவ்வளவு எண்ணெய் தேவையோ அவ்வளவு எண்ணெயையும் தொடர்ந்து வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

    Advertisement

    அமெரிக்காவின் மிரட்டல் மசோதா

    ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் பெரிய நாடுகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் முதல் 5 நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், ரஷ்யாவிடம் அதிக எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கும் அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

    எண்ணெய் வாங்குவதால் போர் முடிந்துவிடாது: ஜெய்சங்கர் பதில்

    இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தொடர்ந்து உலக அரங்கில் நியாயப்படுத்தி வருகிறார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள இந்த நேரத்தில், 140 கோடி இந்திய மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வது எவ்வளவு பெரிய சவால் என்பதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    Advertisement

    மேலும் பேசிய அவர், "இந்தியா எண்ணெய் வாங்குவதாலோ அல்லது வாங்காமல் நிறுத்துவதாலோ இந்த உக்ரைன் போர் முடிவுக்கு வந்துவிடாது. எவராவது எண்ணெய், அலுமினியம், உரம் போன்ற பொருட்களை வாங்குவதை வைத்து இந்தப் போரின் முடிவைத் தீர்மானிக்க முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியான சந்திப்புகள் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்" என்று திட்டவட்டமாகக் கூறினார்.

    இந்தியாவின் இறக்குமதியில் முதலிடம்

    2022-ஆம் ஆண்டு உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, மேற்கத்திய நாடுகளின் தடைகளால் ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வழங்கத் தொடங்கியது. இதைப் பயன்படுத்திக் கொண்ட இந்தியா, தனது இறக்குமதியை மளமளவென உயர்த்தியது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா மாறியது.

    Advertisement

    சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கிய எண்ணெயின் அளவு 26.3 சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் தினமும் 28.2 லட்சம் பீப்பாய்கள் வாங்கப்பட்ட நிலையில், ஆகஸ்டில் அது 20.8 லட்சம் பீப்பாய்களாகக் குறைந்தது. எண்ணெய் வாங்குவது குறைந்திருந்தாலும் கூட, இந்தியா வெளிநாடுகளில் இருந்து வாங்கும் மொத்த கச்சா எண்ணெயில் 45 சதவீதம் ரஷ்யாவிடம் இருந்துதான் வருகிறது. இதன் மூலம் மற்ற நாடுகளை விட ரஷ்யாவே இப்போதும் இந்தியாவின் முதன்மை எண்ணெய் விநியோக நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது.

    English Summary

    Why India Buys Russian Oil: Russian Envoy Denis Alipov Reveals the reason