ரிசர்வ் வங்கியில் தங்கம் கையிருப்பது ஏன் முக்கியம்.. இந்தியா எவ்வளவு வைத்து இருக்கிறது தெரியுமா?

  • சென்னை: ஒரு நாட்டின் பண மதிப்பை நிர்ணயிப்பதில் தங்கம்தான் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் பல டன் கணக்கில் தங்கத்தை அதன் மைய வங்கிகளில் கையிருப்பாக வைத்துக்கொள்கிறது. தங்கத்தை மத்திய வங்கிகளில் கையிருப்பாக வைக்க வேண்டியதன் அவசியம் என்ன? இந்தியாவிடம் எவ்வளவு இருக்கிறது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    தங்கத்தின் மீதான மவுசு மக்கள் மத்தியில் ஒருபோதும் குறைவது இல்லை. விலை எவ்வளவு கூடினாலும் நகைக்கடைகளில் கூட்டம் கூடிக்கொண்டேதான் போகிறது. இந்தியாவில் மக்கள் தங்கத்தை முதலீடாக மட்டுமின்றி கவுரம், அந்தஸ்தாகவும் பார்க்கிறார்கள்.

    Advertisement

    40,000 டன் தங்கம் கையிருப்பு

    சர்வதேச அளவில் நிலவும் புவிசார் பதற்றம், நிச்சயமற்ற சூழல் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருக்கிறது. இதனால், கடந்த ஓராண்டில் மட்டும் தங்கம் விலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியான நிலையில், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றன. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தரவின்படி, மத்திய வங்கிகள் மற்றும் IMF இணைந்து சுமார் 40,000 டன் தங்கத்தை வைத்துள்ளன. இது உலக தங்கக் கவுன்சில் கணக்கிட்டுள்ள உலகின் மொத்த தங்க இருப்பில் சுமார் 20% ஆகும்.

    Advertisement

    உலக அளவில் எந்த நடுகள் அதிக தங்கம் வைத்து இருக்கிறது என்ற விவரங்களை பட்டியலிட்டோம் என்றால் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்புதான் டாப்பில் உள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகளே உலகின் பெரும்பாலான தங்க இருப்பை வைத்துள்ளன. 2024 நிலவரப்படி எந்த நாடுகளின் மத்திய வங்கிகள் எவ்வளவு தங்கம் வைத்துள்ளன என்ற விவரங்கள் பார்க்கலாம்..

    தங்கம் அதிகம் வைத்துள்ள டாப் 10 நாடுகள்

    * ஐரோப்பிய யூனியன் - 903 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம்
    * அமெரிக்கா - 682
    * ரஷ்யா: 196
    * சீனா: 191
    * சுவிட்சர்லாந்து: 87

    Advertisement

    * இந்தியா: 73
    * ஜப்பான்: 71
    * துருக்கி: 65
    * போலந்து: 38
    * தைவான்: 38

    ஆகிய நாடுகள் அதிக தங்கம் வைத்துள்ள டாப் 10 நாடுகளாக உள்ளன.

    யார் தங்கம் வாங்குகின்றனர்?

    1970 முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை விற்று வந்தாலும், 2024 இறுதியில் உலகின் மொத்த மத்திய வங்கி தங்க இருப்பில் 57% இன்னும் இந்நாடுகளிடமே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து இருப்பதே ஆகும். 2007 முதல் 2024 வரை தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 830 டாலரிலிருந்து 2,560 டாலராக உயர்ந்தது. உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, வளர்ந்து வரும் நாடுகளின் மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கம் வாங்கத் தொடங்கின. குறிப்பாக இந்தியா, சீனா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளும் அதிக அளவில் தங்கம் வாங்குகின்றன.

    Advertisement

    மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது ஏன்?

    உலக தங்க கவுன்சில் நடத்திய ஆய்வுகளின் படி கீழ்க்கண்ட காரணங்களால் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பதாக தெரியவந்துள்ளது.

    * நீண்டகாலத்திற்கு மதிப்பை பாதுகாக்கும் மற்றும் பாதுகாப்பான சொத்தாக தங்கம் இருப்பது,
    * பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாக செயல்படுவது,
    * புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு எதிரான பாதுகாப்பு,
    * பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளின் போது தங்கத்தின் மதிப்பு உயர்வது போன்ற காரணங்களை உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

    English Summary

    Reserve Bank of India maintains gold reserves to strengthen financial stability, diversify foreign exchange assets and boost investor confidence. India holds one of the world's largest official gold reserves, which serve as a key safeguard during economic and geopolitical uncertainties.