அருமை தெரியாமல் தூக்கி போட்ட அமெரிக்கா! அல்வா போல அள்ளிக்கொள்ளும் இந்தியா! ராணுவத்தில் மேஜர் அப்டேட்

  • டெல்லி: அமெரிக்காவின் புகழ்பெற்ற MQ-9 ரீப்பர் ட்ரோன்களை இந்தியா கொள்முதல் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. தற்போது அமெரிக்காவே இந்த ட்ரோன்களை ஓரம் கட்டி வைத்திருக்கும் நிலையில் இந்தியா இதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    ஈரான் உட்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளுடனான போரில் அமெரிக்கா MQ-9 ரீப்பர் ட்ரோன்களை பயன்படுத்தியிருந்தது. இப்போது, இந்த ட்ரோனை ஓரம் கட்டி வைத்துவிட்டு புதிய ட்ரோன் உற்பத்தியில் கவனம் செலுத்தியிருக்கிறது. இந்த வாய்ப்பைதான் இந்தியா சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

    Advertisement

    ஆபத்தான ட்ரோன்

    உலகில் சில வகை ட்ரோன்கள் ரொம்பவும் ஆபத்தானவை. அதில் முக்கியமானதுதான் இந்த MQ-9 ரீப்பர். ஆளு பார்க்க டம்மி பீசு போலதான் தெரியும். ஆனால், சரியான வேலைக்காரன். தொடர்ந்து 40 மணி நேரம் நிற்காமல் பறந்த கண்காணிக்கும். சாதாரண வணிக விமானங்கள் பறக்கும் உயரத்தை விட.. அதாவது 50,000 அடி உயரத்தில் இது பறக்கும். இவ்வளவு உயரத்தில் பறக்கும்போது தரையிலிருந்து இதை பார்க்கவோ, சுடவோ வாய்ப்பே இல்லை. இவ்வளவு உயரத்தில் இருந்தாலும், தரையில் நடக்கும் மனிதர்களை துல்லியமாக அடையாளம் காணும்.

    ரிமோட் கண்ட்ரோல்

    ட்ரோன் எனில்.. வெறுமென படம் எடுத்து அனுப்பும் கருவி என்று நினைத்துவிட வேண்டாம். இந்த ட்ரோன் 1,700 கிலோ எடைக் கொண்ட ஆயுதங்களை தாக்கி செல்லும். ஹெல்ஃபயர் ஏவுகணைகள், GBU-12 ஏவுகணைகளை இது எடுத்து செல்லும். இதை வைத்து தாக்கினால்.. அந்த தாக்குதல் கொடூரமாக இருக்கும். எனவேதான் இது உலகின் மிகவும் ஆபத்தான ட்ரோன் என்று சொல்லப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில்.. உலகில் எந்த மூலையில் இருந்தும் ரிமோட் மூலம் இதை இயக்க முடியும்.

    Advertisement

    டஃப் கொடுக்கும் ஈரான்

    என்னதான் தலைவன் இவ்வளவு சீனாகா இருந்தாலும்.. மறுபுறம் ஈரான் வைத்திருக்கும் ஆயுதங்கள் இதை விட பயங்கரமானவை. 50,000 உயரத்தில் 480 கி.மீ வேகத்தில் பறக்கும் MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் எல்லாம் ஈரானுக்கு ஒரு மேட்டரே இல்லை. இப்படிதான் ஈரான் மற்றும் ஏமனிடம் அமெரிக்கா சுமார் 45 MQ-9 ரீப்பர் ட்ரோன்களை பறிகொடுத்திருக்கிறது. ஒரு MQ-9 ட்ரோனின் விலை மட்டும் ரூ.250-400 கோடி. எனவே, விலை மலிவான.. அதே நேரம் ரொம்பவும் வேகமான ட்ரோன்களை தயாரிக்க அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

    இந்தியாவின் முயற்சி

    இந்தியாவுக்கு ஈரான் மாதிரியான எதிரிகள் கிடையாது. நாம் இப்போதைக்கு எந்த போரிலும் ஈடுபடவில்லை. எனவே, குறைந்த விலையில் இந்த ட்ரோன்களை பேரம் பேசி வாங்க இந்தியா முயன்று வருகிறது. ஏற்கெனவே 2 MQ-9 ட்ரோன்களை நாம் லீஸுக்கு எடுத்து இயக்கி வருகிறோம். இந்திய பெருங்கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் கண்காணிப்பு ரொம்ப அவசியம். எனவே, இந்த ட்ரோன்களை ரூ.32,000 கொடுத்து வாங்க முன் வந்திருக்கிறது. மொத்தம் 31 ட்ரோன்கள் வாங்கப்பட இருக்கின்றன.

    Advertisement

    ட்ரோன் மட்டும் எனில் ரூ.200-400 கோடி வரும். ஆனால் கட்டுப்பாட்டு மையம், ஆயுதங்கள் என அனைத்தும் சேர்த்து பார்த்தால் ஒரு ட்ரோனின் மதிப்பு ரூ.950-1,000 கோடி வரும். எனவேதான் ரூ.32,000ஐ இந்தியா கொடுக்கிறது. மொத்தத்தில்.. ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியத்தை இந்தியா சரியாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

    Topics: #us #india #army

    English Summary

    India is making efforts to procure the renowned US-made MQ-9 Reaper drones. India's emphasis on this acquisition has drawn attention, particularly given that the US itself is currently phasing these drones out of service.