என்னது ராகுல் காந்தி ரோல் மாடலா.. ரூ.40 லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளையை வேண்டாம் என உதறிய பெண்!

  • டெல்லி: ''பார்க்க அழகாக இருக்கிறார். நல்ல குடும்பம்.. ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பாதிக்கிறார். ஆனாலும் எனக்கு வந்த திருமண வரனை நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இதற்கு முக்கிய காரணம் அவர் தனது ரோல் மாடலாக ராகுல் காந்தியை தேர்வு செய்து வைத்திருந்தது தான்'' என்று பெண் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது விவாதத்தை கிளப்பி உள்ளது.

    Advertisement

    இதுதொடர்பாக ஆருஹி ரெட்டி என்ற பெயர் கொண்ட எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''எனக்கு சமீபத்தில் திருமண வரன் ன்று வந்தது. அந்த நபர் நல்ல அழகாக இருந்தார். ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானமாக பெறுகிறார். நல்ல குடும்ப பின்னணியை கொண்டுள்ளார். ஆனாலும் நான் அவரை நிராகரித்து விட்டேன். இதற்கு ஒரெயொரு காரணம் தான்.

    Advertisement

    அது என்னவென்றால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக அவரது ரோல் மாடல் ராகுல் காந்தி என்பதை அறிந்தது தான். ஒரு தோல்வியாளரை ரோல் மாடலாக கொள்பவரின் அறிவுத்தினற் எந்த அளவு குறைவாக இருக்கும் என்பதை புரிந்து கொள்வது கடினமல்ல. அடிமைத்தனம், தேசவிரோத மனப்பான்மை, இந்து மதத்துக்கு எதிரான போக்கு உள்ளிட்டவற்றை தவிர அவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வேறு என்ன கற்று கொடுக்கப்போகிறார்கள்?.

    என்னை பொறுத்தவரை பணம், அழகு, சிறந்த வேலை என்பதை விட என் நாடு, என் மதம் உள்ளிட்டவை தான் முக்கியம். ஒரு பெருமைமிக்க தேசியவாத இந்துவாக ஒரு தோல்வியாளரை (ராகுல் காந்தி) ரோல்மாடலாக கொண்டுள்ளவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று கூறியுள்ளார். இந்த பதிவுக்கு தற்போது ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    Advertisement

    ஒருவர், ''நல்ல முடிவு. உங்களின் பரந்த பார்வைக்கு நான் மரியாதை அளிக்கிறேன். உங்களுக்கு இன்னும் சிறப்பானது நடக்கட்டும்'' என்று அவரது முடிவை ஆதரித்துள்ளார். மற்றொருவர், ''சகோதரிக்கு சல்யூட்'' என்றும், இன்னொருவர், ''நல்ல முடிவு'' என்றும் ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர்.

    அதேவேளையில் இன்னொருவரோ, ''உங்களின் attitude அதிகமாக உள்ளது. இது உங்களின் முட்டாள்தமான கொள்கையால் கூட இருக்கலாம்'' என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் ஒருவர், ''முட்டாள்தனமான காரணத்திற்காக நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார்'' என்று கூறியுள்ளார். இன்னொருவர், ''நிச்சயம் அவர் தான் உங்களை ரிஜெக்ட் செய்திருக்க கூடும். ஏனென்றால் புத்தியற்ற, குட்டுத்தனமாக ஒன்றை ஆதரிக்கும் உங்களை அவர் நிராகரித்து இருக்கலாம்'' என சீண்டி உள்ளார். இப்படியாக அவரது பதிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    English Summary

    "The guy was good lookinge, comes from a good family, and earns Rs.40 lakh a year. Yet, I turned down the marriage proposal. The main reason was that he had chosen Rahul Gandhi as his role model." A woman's post sharing this on X has sparked a debate.