பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் போடுவது.. ஆண்களை கெடுக்குமா? நறுக் தீர்ப்பு கொடுத்த டெல்லி உயர்நீதிமன்றம்

  • டெல்லி: பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணிவது ஆண்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும் என்றும், இதுவே ஆண்களை தவறு செய்ய தூண்டுகிறது என்கிற வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மட்டுமல்லாது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

    இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் உடை என்பது அவர்களின் சுதந்திரத்திற்கான அளவு கோளாக பார்க்கப்படுகிறது. தாராள உடைதான் பெண்களுக்கானது.. டைட்டான இறுக்கமான உடைகள் பெண்களுக்கானது கிடையாது என்றும், அப்படி டிரஸ் போடுவது ஆபாசமானது என்றும் கருத்துக்கள் நீடித்து வருகின்றன. இன்று இப்படியான வாதங்கள் மீது சாட்டையை கொண்டு அடித்திருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

    பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட நபரின் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பெண்களின் உடை குறித்த பழைமைவாத கருத்துக்கள் தூக்கிக் கொண்டு வந்திருந்தார். பெண்கள் ஜீன்ஸ் அணிவது ஆண்களை கெடுக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த வாதங்களை அப்படியே நிராகரித்த நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா, இதையெல்லாம் சாக்கு சொல்லி பெண்களுக்கு எதிரான குற்றங்களை நியாயப்படுத்த முடியாது என்று கூறி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை உறுதி செய்தார்.

    பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஒரு பெண்ணின் ஆடையை காரணம் காட்டி அவர் மீதான பாலியல் அத்துமீறல்களை நியாயப்படுத்த முடியாது. இப்படியான பேச்சுக்கள் சமூகத்தின் பிற்போக்கு சிந்தனையை காட்டுகிறது. சட்டத்தின் முன் இதற்கெல்லாம் இடம் கிடையாது என்று கூறி, குற்றவாளிக்கு தண்டனையை உறுதி செய்திருக்கிறார்.

    English Summary

    Womans: The Delhi High Court rejected the argument that women wearing jeans causes agitation in men's minds and incites them to commit wrongdoing. Furthermore, the court ordered the sentencing of an individual involved in a sexual assault.