ராகுல் போராட்டத்தில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை.. உச்சநீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு

  • டெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி கடந்த 7 ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்யக்கோரி நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

    அதுமட்டுமின்றி இந்த போராட்டத்தை காரணம் காட்டி நாளை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லிக்குள் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு 57 மெட்ரோ ரயில் நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதோடு, ஹோட்டல்கள், விடுதிகளில் புதிய புக்கிங் எடுக்க கூடாது என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    நாளை கரப்பான்பூச்சி போராட்டத்துக்கு அனுமதியில்லை.. மீறினால் அவ்வளவுதான்.. டெல்லி போலீஸ் வார்னிங்

    இத்தகைய கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் இன்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அவர் வாதிடும்போது, ''கடந்த 2 நாட்களுக்கு நடந்த போராட்டத்தின் வீடியோவை பாருங்கள். போலீசாரை ஆபாசமாக திட்டியும் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டனர். அதுமட்டுமின்றி பெண் போலீஸ் அதிகாரிள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டனர்.

    பெண் போலீசை தொடக்கூடாத இடத்தில் தொட்ட ராகுல் காந்தி? பாஜக வெளியிட்ட வீடியோ

    அதுமட்டுமின்றி காயம் அடைந்துள்ளனர். இந்த போராட்டம் என்பது சட்டத்துக்கு விரோதமானது. ஏனென்றால் போராட்டத்துக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் நாளைய போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது'' என்றார்.

    இதை கேட்ட நீதிமன்றம் பொதுப்போக்குவரத்து பாதிக்கப்படுவது பற்றி கவலை தெரிவித்ததோடு, பாதுகாப்பு என்ற பெயரில் அதிகாரிகள் வரம்பு மீறி செயல்படக்கூடாது என கூறியது. தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

    English Summary

    A major stir has been caused by the Solicitor General, appearing on behalf of the Central Government, stating in the Supreme Court that female police personnel were subjected to sexual harassment during a protest held by the Congress party in Delhi on the 7th-a protest demanding the resignation of the Chief Election Commissioner, Gyanesh Kumar.