தர்மேந்திர பிரதானுக்கு சொந்த கட்சிக்குள்ளே மரியாதை இல்லை.. பாஜக எம்பியின் மகள் செய்த சம்பவம்

  • டெல்லி: மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான்.. மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவரை விமர்சிக்கும் வகையில் பாஜக எம்பியின் மகள் ஒருவர் சோஷியல் மீடியாவில் போட்டிருந்த பதிவு கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். தொடர் போராட்டங்களை தொடர்ந்து, அவர் கடந்த சனிக்கிழமை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அவருக்கு சொந்த கட்சிக்குள்ளேயே மரியாதை இல்லாத நிலை நீடித்திருக்கிறது.

    Advertisement

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் தொகுதி பாஜக எம்பியான அபராஜிதா சாரங்கியின் மகள் அர்சிதா சச்சின் ராகர், தர்மேந்திர பிரதான் குறித்து விமர்சித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். பிரதான் பதவி விலகிய செய்தி வெளியான உடன், அவரது படத்தை தனது பேஜில் பகிர்ந்து, "மாணவர் போராட்டத்தை தொடர்ந்து ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான்" என்று பதிவிட்டிருந்தார். இது ஒரு சாதாரணமான சோஷியல் மீடியா போஸ்ட்தான். ஆனால், பாஜக எம்பியின் மகள் பதிவிட்டிருப்பதுதான் பஞ்சாயத்தை கிளப்பியது.

    நம்ம கட்சி தலைவரை அவமானப்படுத்தும் வகையில்.. நாமே போஸ்ட் போடலாமா? என்று பாஜகவினர் கொந்தளித்தனர். உடனே இந்த போஸ்ட்டை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், அர்சிதா சச்சின் ராகர் இதை மறுத்துவிட்டார். அதற்கு பதில் இன்னொரு போஸ்ட்டையும் போட்டிருந்தார். அதாவது, "தர்மேந்திர பிராதானின் உதவியாளருக்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்கிறேன். வழக்கம்போல என் அம்மாவிடம் சொல்லி.. இந்த போஸ்ட்டை டெலிட் செய்ய சொல்லாதீர்கள். நான் நிச்சயம் டெலிட் செய்ய மாட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

    Advertisement

    இது பாஜகவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. சொந்த கட்சியின் எம்பியின் மகளை கூட நம்மால் கட்டுப்படுத்த முடிவில்லை என்று பாஜக தலைவர்கள் கவலையடைந்திருக்கின்றனர்.

    மறுபுறம் அர்சிதா சச்சின் ராகரின் தாய், "ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் இருக்கிறது. அந்த வகையில் ஜென் Z தலைமுறையை சேர்ந்த என்னுடைய மகள் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அவளுக்கு அதை தெரிவிக்க முழு உரிமை இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

    பதவியிலிருந்து ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதானுக்கு சொந்த கட்சியிலேயே மரியாதை இல்லாத நிலை இருக்கிறதே.. என்று பல்வேறு தரப்பினரும் பாஜகவை விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர்.

    English Summary

    BJP MP: Dharmendra Pradhan, who served as the Union Education Minister, resigned following student protests. Amidst this, a social media post by the daughter of a BJP MP, criticizing him, has drawn attention.