‘‘உங்க அம்மா''.. ராஜ்யசபாவில் டென்ஷனாக்கிய கம்யூனிஸ்ட் எம்பிக்கு அதிமுக தம்பிதுரை கொடுத்த ஷாக்

  • டெல்லி: பொதுத்தேர்வுகள் திருத்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அம்மா.. அம்மா என்று கூறி தம்பிதுரை எம்பி பேசினார். அப்போது அவருக்கு பின்னால் இருந்த கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி, ''எந்த அம்மா.. எந்த அம்மா'' என்று இடையூறு செய்ததால் டென்ஷனான தம்பிதுரை எம்பி ''உங்க அம்மா'' என்று ஆக்ரோஷமாக கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

    Advertisement

    'நீட்' வினாத்தாள் கசிவு நம் நாட்டில் பெரும் பிரச்சனையாக மாறியது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் தொடர் போராட்டத்தையொட்டி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். வினாத்தாள் கசிவுக்கு எதிராக மத்திய அரசு விரைவு நீதிமன்றம் அமைப்பதாகவும், தண்டனையை அதிகப்படுத்துவதாகவும் கூறியது.

    Advertisement

    இதனை செயல்பாட்டுக்கும் கொண்டு வரும் வகையில் பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026 நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முதலில் லோக்சபாவில் இந்த மசோதா நிறைவேறியது. அதன்பிறகு நேற்று ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறியது.

    முன்னதாக மசோதா மீது நேற்று ராஜ்யசபாவில் விவாதம் நடந்தது. அதிமுக ராஜ்யசபா எம்பி தம்பிதுரை பேசினார். தம்பிதுரை எம்பி கூறுகையில், ''நீட் தேர்வு முதன் முதலில் 2010ல் அறிவிக்கப்பட்டு 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ அரசால் கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த கூட்டணியில் திமுக இருந்தது.

    Advertisement

    ஆனால் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக நீட் தேர்வை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தில் நீட் விவகாரம் இருந்தபோது தமிழ்நாட்டின் மருத்துவ சேர்க்கை கொள்கை மதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை வைத்தார்.

    நீட் தேர்வை மீண்டும் கொண்டு வருவதற்காக மத்திய அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை திரும்ப பெறக்கோரி மறைந்த ஜெயலலிதா ஜூன் 2014, 2015 அக்டோபர் மாதம பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்கள் எழுதினா். அதிமுக நீட் எதிர்ப்பில் உறுதியாக உள்ளது. மத்திய அரசால் 2017ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அழுத்தமான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. எந்த சூழலிலும் நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறோம். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்'' என்று பேசினார்.

    Advertisement

    இந்த சமயத்தில் தம்பிதுரை எம்பிக்கு பின்னால் அமர்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளாவை சேர்ந்த எம்பி ஜான் பிரிட்டோஸ் கிண்டல் செய்யும் வகையில் கேள்வி எழுப்பியபடி இருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தம்பிதுரை 'அம்மா.. அம்மா..' என்று கூறி பேசி வந்தார்.

    அப்போது ஜான் பிரிட்டோஸ் எம்பி ''Which Amma'' (எந்த அம்மா) என மீண்டும் மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டு தம்பிதுரைக்கு இடையூறு செய்தார். இதனால் ஒரு கட்டத்தில் டென்ஷனான தம்பிதுரை ''உங்க அம்மா'' என்று கூறி தொடர்ந்து பேசினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    English Summary

    In Rajya Sabha, AIADMK MP Thambidurai spoke, repeatedly referring to the late Chief Minister Jayalalithaa as "Amma." At that point, a CPI(M) MP from Kerala, seated behind him, interrupted by asking, "Which Amma? Which Amma?" Agitated by this, Thambidurai retorted angrily, "Your mother." A video of this exchange is currently circulating online.