டெல்லி: நீட் முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அவருக்கு ஆதரவாக உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். தர்மேந்திர பிரதானை மிக சிறந்த தலைவர்களில் ஒருவர் என்றும் ஸ்ரீதர் வேம்பு புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லியில் கடந்த ஒரு மாதமாக நீட் மாணவர் போராட்டம் தீவிரமாக நடந்து வந்தது. முதலில் டெல்லியில் நடந்த இந்த போராட்டம் பிறகு நாடு முழுக்க பரவியது. தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
முதலில் பேச்சுவார்த்தை மூலம் நிலைமையை சமாளிக்க மத்திய அரசு ரெடியாக இருந்தாலும் மாணவர்களை அதை விடுவதாக இல்லை. நாளுக்கு நாள் அழுத்தம் அதிகரிக்கவே இதனால் வேறு வழியில்லாமல் தர்மேந்திர பிரதான் இன்று ராஜினாமா செய்தார். இது மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவாக ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டரில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "மக்களுக்கு சேவை செய்யும் தர்மேந்திர பிரதான் எனக்கு தெரிந்த மிக சிறந்த தலைவர்களில் ஒருவர். நாட்டின் இளைஞர்கள் மீது, குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மீது அவருக்கு அளவிட முடியாத அக்கறை உள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு சிறந்த திறன் பயிற்சி வழங்குவது எப்படி என்பது குறித்து நாங்கள் பலமுறை விரிவாக விவாதித்துள்ளோம். அவர் ராஜினாமாவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஆனால், அவர் தனது தனிப்பட்ட நலனை விட நாட்டின் நலனையே மேலாக வைத்திருக்கிறார். அதனால் அவர் மீதான எனது மரியாதை இப்போது இன்னும் அதிகரித்துள்ளது. உங்களின் சேவைக்கு நன்றி. நீங்கள் மேற்கொண்டு வரும் நல்ல பணிக்காக தொடர்ந்து போராடுங்கள்"என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீதர் வேம்புவும், தர்மேந்திர பிரதானும் கடந்த சில ஆண்டுகளாக திறன் மேம்பாடு, தொழில்நுட்ப கல்வி, கிராமப்புற மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை உயர்த்துவது போன்ற விஷயங்களில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.. இதன் காரணமாகவே தர்மேந்திர பிரதானுக்கு ஆதரவாக ஸ்ரீதர் வேம்பு குரல் கொடுத்துள்ளார். முன்னதாக போராட்டம் தீவிரமாக நடந்த போதும் கூட கரப்பான் பூச்சி கட்சிக்கு எதிராகவே ஸ்ரீதர் வேம்பு ட்வீட் செய்திருந்தார். அப்போது அவர், "இந்தியாவை குழப்பத்தில் தள்ளி நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பது மட்டுமே டெல்லியில் போராட்டம் நடத்துபவர்களின் நோக்கம்! இந்தியாவை பலவீனப்படுத்த விரும்பும் சக்திகள் இந்த முயற்சிக்கு துணை நிற்கின்றன. இதை நாம் தோற்கடிக்க வேண்டும். ஜனநாயக நாடான இந்தியாவில்.. மக்களின் கருத்தை வெளிப்படுத்த சரியான வழி தேர்தல் தான்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் தர்மேந்திர பிரதான் வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்தார். நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை தொடர்ந்து நாடு முழுவதும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், "தேச விரோத சக்திகள் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவொரு ஒரு மாணவரின் எதிர்காலம் கூட சட்டச் சிக்கலில் சிக்க கூடாது. மாணவர்கள் போராட்டங்களில் நேரத்தை செலவிடாமல், படிப்பிலும் எதிர்காலத்தை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும்" என்று சொல்லி தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.தர்மேந்திர பிரதான் ராஜினாமா
ஆதரவாக வந்த ஸ்ரீதர் வேம்பு
முதல்முறை இல்லை
ஸ்ரீதர் வேம்பு