தர்மபுரி: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் காதலர்களுக்குள் வாக்குவாதம் நடந்துள்ளது.. இந்த வாக்குவாதம் தகராறாக உருவெடுத்தது.. இந்த தகராறு சண்டையாக மாறி, கத்திக்குத்து வரை சென்றுவிட்டது.. இதையெல்லாம் நேரில் பார்த்து, அங்கிருந்த பயணிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.. உண்மையிலேயே அங்கு என்னதான் நடந்தது?
தர்மபுரி பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலிக்க மறுத்தாலோ அல்லது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றாலோ, உடனே வன்முறையில் இறங்கும் சில இளைஞர்களின் போக்கால், இந்தச் சம்பவத்தில் இளம் பெண் படுகாயமடைந்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அடுத்துள்ளது தேங்காய்மரத்துப்பட்டி.. இங்கு வசித்து வருபவர் லட்சுமணன்.. இவரது கடைசி மகள் ஷீலாவுக்கு 22 வயதாகிறது.. தர்மபுரியில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார். இதே தமர்மபுரியை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சின்னசாமி (31) என்பவருடன் ஷீலாவுக்கு கடந்த ஒரு வருடமாக காதல் இருந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சின்னசாமி, ஷீலாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பெண் கேட்டு அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் ஷீலாவின் பெற்றோருக்கு இந்த கல்யாணம் பிடிக்கவில்லை.. அதனால் இவர்களின் காதலுக்கு கறாராக மறுப்பு சொல்லிவிட்டார்கள்.பெற்றோரின் பேச்சை மீற விரும்பாத ஷீலா, அதன் பிறகு சின்னசாமியுடன் பேசுவதை குறைத்துக் கொண்டுள்ளார்... திடீரென ஷீலா தன்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டது, சின்னசாமிக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது. இந்நிலையில், நேற்று சாயங்காரம்வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், பஸ்ஸூக்காக ஷீலா காத்துக் கொண்டிருந்தார் ஷீலா. அப்போது அங்கே வந்த சின்னசாமி, திடீரென ஷீலாவிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். "ஏன் என்னிடம் பேசுவதில்லை? ஏன் என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறாய்?" என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, திடீரென ஷீலாவின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டார்.. மேலும், ஷீலாவின் வயிற்றிலும் குத்தினார். ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு பஸ் ஸ்டாண்டிலிருந்த பயணிகளும் பொதுமக்களும் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷீலாவை உடனடியாக மீட்டனர்.. தப்பியோட முயன்ற சின்னசாமியை வளைத்துப் பிடித்து, பொதுமக்கள் சரமாரியாக தாக்கினார்கள்.. பிறகு தர்மபுரி டவுன் போலீசாரிடமும் ஒப்படைத்தனர். போலீசார் சின்னசாமியை கைது செய்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனிடையே கழுத்து, வயிற்றில் பலத்த காயமடைந்த ஷீலா, தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வந்த நிலையில், இப்போதுதான் ஷீலாவுக்கு சுயநினைவு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தான கட்டத்தையும் ஷீலா தாண்டிவிட்டாராம். அதேபோல பொதுமக்களால் தாக்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சின்னசாமியும் சிகிச்சை பெற்று வருகிறார்.. அவர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனதுமே அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்களாம்.. இந்த தாக்குதல் சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....!!தர்மபுரி பஸ் ஸ்டாண்டு
சின்னசாமி - ஷீலா
காதலி பேசாததால் ஆத்திரம்
ஷீலாவுக்கு நினைவு திரும்பியது