பாப்பாத்தி எடுத்த ராங் ரூட்.. தர்மபுரி கள்ளக்காதலன் செய்த காரியம்! கடைசியில் காட்டித்தந்த ஒரு அடி

  • தர்மபுரி: தர்மபுரி கடத்தூரில் ஒரு காலி இடத்திலிருநது திடீரென துர்நாற்றம் வீசத் தொடங்கியது.. குப்பைகள் குவிந்து கிடந்ததால் அதிலிருந்துதான் நாற்றம் வருகிறது என்று நினைத்த மக்களுக்கு, அங்கே காத்திருந்தது பெரிய அதிர்ச்சி... போலீசார் வந்து அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டிருந்தது. யார் அந்தப் பெண்? அவருக்கு என்ன நடந்தது? இதன் பின்னணியை விசாரித்தபோதுதான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியே வர துவங்கின.

    Advertisement

    அக்டோபர் 12-ம் தேதி காலை.. தர்மபுரி மாவட்டம் கடத்தூர் 4-வது வார்டில், காலியிடம் ஒன்றில் குப்பைகள் குவிந்திருந்தது.. அதிலிருந்து குப்பென்று வீசிய நாற்றம், நேரம் செல்ல செல்ல மோசமானது.. இதனால் சந்தேகப்பட்ட மக்கள், உடனடியாக கடத்தூர் போலீசுக்கு தகவல் தந்தார்கள்..

    Advertisement

    குப்பையிலிருந்து வந்த துர்நாற்றம்

    அங்கு வந்த போலீசார் சோதனை செய்தபோதுதான், குப்பைகளுக்கு அடியில் பெண்ணின் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே தடய அறிவியல் துறையினர், வருவாய்த்துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த இடம் தோண்ட முயன்றனர்.. ஆனால், வெறும் ஒரு அடி ஆழத்திலேயே புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் உடல் வெளியே எடுக்கப்பட்டு விட்டது.. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

    உடனே போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்த பெண்ணின் பெயர் பாப்பாத்தி என்பது தெரியவந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், வெங்கடாசலம் என்பவருடன் கடந்த 6 மாதங்களாகக் கடத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். ஆனால், பாப்பாத்தி எப்படி இறந்தார் என்பதை கண்டறிய, போலீசார் வெங்கடாசலத்தை தேடி சென்றனர்.. ஆனால் வெங்கடாசலம் அங்கு இல்லை..

    Advertisement

    இதனால், அவரை வலைவீசிய போலீசார், வெளியூரில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். ஆரம்பத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்று சாதித்துள்ளார் வெங்கடாச்சலம்.. பிறகு போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்கவும், பாப்பாத்தியை கொன்று புதைத்து விட்டதாக ஒப்புக் கொண்டார்.. அத்துடன் எதற்காக பாத்தியை கொன்றார் என்பதையும் வாக்குமூலமாக சொன்னார்.

    தர்மபுரி பாப்பாத்தி கொலை

    அதாவது கடத்தூர் அருகே மணியம்பாடியைச் சேர்ந்தவர் இந்த 46 வயதான வெங்கடாசலம். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வெளியூர்களுக்கு சென்று வீட்டு வேலை செய்து வந்தபோது, ஒத்த பாப்பாத்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

    Advertisement

    பாப்பாத்திக்கும் 46 வயதுதான். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனால், குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வந்திருக்கிறார். வேலைக்கு சென்ற இடங்களில்தான் வெங்கடாச்சலத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கடத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள். எனினும், வெங்கடாசலம் தனது சொந்த ஊரான மணியம்பாடிக்கும் அடிக்கடி சென்று வருவாராம்.

    வேறு ஆண்களுடன் தொடர்பு

    இந்த நிலையில்தான் பாப்பாத்தியின் நடவடிக்கையில் வெங்கடாசலத்துக்கு மாற்றம் தென்பட்டுள்ளது.. தன்னிடம் சொல்லாமல் அடிக்கடி வெளியே செல்வதாகவும், பாப்பாத்திக்கு வேறு சிலருடன் தொடர்பு இருக்கலாம் என்றும் வெங்கடாசலத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறும் நடந்துள்ளது.

    Advertisement

    அப்படித்தான் கடந்த 2-ம் தேதியும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது வெங்கடாசலம் கட்டையால் பாப்பாத்தியைக் அடித்து தாக்கியிருக்கிறார்.. இதில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி, ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்திருக்கிறார். ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அப்படியே விட்டுவிட்டு வெங்கடாசலம், கோபத்தில் கிளம்பிபோய்விட்டாராம்,..

    பிறகு அக்டோபர் 6-ம் தேதி வீட்டுக்குத் திரும்பி வந்தபோதுதான் பாப்பாத்தி உயிரிழந்து சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.. உடனே சடலத்தை துணியால் மூட்டையாக கட்டி,வீட்டுக்கு பக்கத்திலிருந்த காலி இடத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, மேலே குப்பைகளைக் கொட்டி மறைத்திருக்கிறார்.

    கணக்கு போட்ட வெங்கடாச்சலம்

    அதுமட்டுமல்ல, பாப்பாத்தி ஏற்கனவே குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூரில் வசித்து வந்ததால், அவரை தேடி சொந்தக்காரர்கள் யாரும் வர மாட்டார்கள் என்றும், கடத்தூரில் வசிப்பவர்களுக்கும் பாப்பாத்தியை பற்றித் தெரியாது, அதனால் அவர் உயிரிழந்தது யாருக்கும் தெரியாமலே போய்விடும் என்று வெங்கடாசலம் கணக்கு போட்டுள்ளார்..

    Advertisement

    அதற்கேற்றபடி, வெங்கடாசலம் நினைத்தபடியே, சம்பவம் நடந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு பாப்பாத்தியும் வெங்கடாசலமும் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாமல் இருந்திருக்கிறது. பிழைப்புக்காக வெளியூரிலிருந்து வந்து குடியிருப்பவர்கள் என்றுதான் நினைத்திருக்கிறார்கள். ஆனால், இப்படி ஒரு சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திட்டமிட்டு கொல்லவில்லை

    போலீசாரிடம் வாக்குமூலம் தந்தபோதுகூட, "பாப்பாத்தை கொல்ல வேண்டும் என்று கனவிலும் நினைத்ததில்லை, திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை" என்கிறாராம் வெங்கடாசலம்..

    இருந்தாலும், ஆத்திரத்தில் தாக்கியிருந்தால், காயமடைந்த பாப்பாத்தியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாமே? 2ம் தேதி சென்றவர் 6ம் தேதி ஏன் வரவேண்டும்? அவர் உயிரிழந்த பிறகு உடலை மறைக்க முயன்றது ஏன்? என்றெல்லாம் சந்தேகங்கள் கிளம்பியுள்ளதால், இதுகுறித்த விசாரணையும் நடக்கிறது.

    எவ்வளவுதான் வெங்கடாசலம் கணக்கு போட்டு காரியத்தை குழிதோண்டி மறைத்தாலும், அவசரத்தில் உடலை ஆழமாக புதைக்காமல், ஒரு அடி ஆழத்தில் புதைத்ததால் துர்நாற்றம் வெளியேறி, வெங்கடாசலத்தையே காட்டி தந்துவிட்டது...!!!

    English Summary

    Dharmapuri Pappathi Case: Lover’s Wrong Turn and the One-Foot Pit That Exposed Him