Cellphone: தருமபுரி - சென்னை அரசு ஏசி பஸ்ஸில் செல்போன் பேசியபடியே ஓட்டிய டிரைவரால் அதிர்ச்சி!

  • தருமபுரி: தருமபுரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தமிழக அரசின் குளிர்சாதன சொகுசுப் பேருந்தை ஓட்டுநர் செல்போனில் பேசியபடியே இயக்கிய சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கிருஷ்ணகிரி மாவட்டம் இருமத்தூரில் இருந்து போச்சம்பள்ளி வரும் வழியில்
    பேருந்தில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநர் வாகனத்தை இயக்கியபடியே செல்போனில் பேசியதாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    இதனைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்ததுடன், ஓட்டுநரின் கவனக்குறைவால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அச்சமடைந்தனர்.

    இதற்கிடையே, ஓட்டுநரின் இந்தச் செயலை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், ஓட்டுநரிடம் செல்போனில் பேசிக் கொண்டே பேருந்தை இயக்குவது ஆபத்தானது என பயணிகள் சுட்டிக்காட்டியபோதும், அவர் அலட்சியமாகப் பதிலளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.

    பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசுப் பேருந்து ஓட்டுநரே இதுபோன்ற பொறுப்பற்ற செயலில் ஈடுபடுவது எந்த வகையில் நியாயம் எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    Advertisement

    எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, விதிமீறல் உறுதி செய்யப்பட்டால் ஓட்டுநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பயணிகளின் உயிர் பாதுகாப்பே முதன்மையானது! பேருந்து இயக்கும்போது செல்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது ஒவ்வொரு ஓட்டுநரின் அடிப்படைக் கடமையாகும். இதை உணராமல் பயணிகள் சுட்டிக் காட்டியும் அலட்சியமாக இருந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

    English Summary

    Tamil nadu government bus driver talk in phone while driving a AC bus from Dharmapuri to Chennai. passengers were shocked after seeig this. They concern about their safety.