கொடைக்கானலில் மர்ம தேசம்.. 'கையில் பொருளுடன்' மதிகெட்டான் சோலைக்கு போக மதுபோதையில் வந்த நபர்

  • கொடைக்கானல்: கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் நுழைவாயில் பகுதியில் மதிகெட்டான் சோலை பகுதிக்கு செல்ல வேண்டும் என மது போதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட நபர்,தன்னை வனத்துறை அதிகாரி தாக்கியதாக கூறி கத்தி எடுத்து குத்துவதற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும் இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி,மதி கெட்டான் சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுள் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை உள்ளது. அனுமதி சீட்டு இல்லாமல் போக முடியாது. இந்நிலையில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பில்லர் ராக்,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் கட்டணம் வசூல் செய்யும் நுழைவாயில் சோதனை சாவடியில்,சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது.

    Advertisement

    இதனை வனத்துறை பணியாளர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். காரை இயக்கிய நபர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.இதனையடுத்து தான் மதிகெட்டான் சோலை செல்வதற்கு அனுமதி சீட்டு வேண்டும், அந்த சோலைக்கு சென்று தான் தொலைந்து விட வேண்டும் என பணியாளர்களிடம் சொல்லவே இவரை தடுத்தி நிறுத்தி அனுப்பியுள்ளனர்.

    அமேசான் பிரைம் வெச்சி இருக்குறவங்க எல்லாருமே பாவம்தான்.. சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்

    மீண்டும் என்னை மட்டும் ஏன் அனுமதிக்க மாட்டீர்கிறீர்கள் என கூறி வனப்பணியாளர்களை ஆபாசமாக பேசியதாக சொல்லப்படுகிறது, இதனை தொடர்ந்து வனத்துறை பணியாளர்களுக்கும், சொகுசு காரில் வந்த நபருக்கும் வாக்குவதாம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து காரில் வந்த நபர் கத்தி ஒன்றை வாங்கி கொண்டு தன்னை தாக்கிய நபரை குத்தி கொல்லமல் விடமாட்டேன் என கூறி சென்றதால், வனத்துறை அவரை தடுத்து இழுத்து வந்தனர்.

    Advertisement

    தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அந்த நபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், மதுரை சேர்ந்த மகேந்திரன் என்பதும் தன்னை அடித்ததால்,அவரை தாக்குவதற்கும் கத்தியை எடுத்து சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, இது குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது, இதனால் இப்பகுதியில் கத்தியுடன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    கொடைக்கானலில் பேரிஜம் ஏரி மற்றும் மதிகெட்டான் சோலை பகுதி என்பது மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய நன்னீர் ஏரியான பேரிஜம் ஏரியை சுற்றுலா பயணிகள் இங்கு சுற்றி பார்க்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இதற்கு கொடைக்கானல் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று அனுமதி சீட்டு பெற வேண்டும். பொதுவாக எல்லா நாளும் அனுமதி கிடைக்கும். எனினும் செவ்வாய்க்கிழமை தவிர, தினமும் காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி கிடைக்கும் . சில நேரங்களில் மதியம் 2 மணிக்குள் திரும்பி விட அறிவுறுத்தப்படுவார்கள். சில நேரங்களில் யானைகள் நடமாட்டம் மற்றும் வனவிலங்கு நடமாட்டம் இருந்தால் சுத்தமாக அனுமதி அளிக்க மாட்டார்கள். வனத்துறை வாகனத்தில் செல்ல ஒரு நபருக்கு ரூ.100, சொந்த வானங்களில் பயணிக்க காருக்கு ரூ.200, வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    Advertisement
    கடையை மூடிய டாஸ்மாக் ஊழியர்களை பணி நீக்கம் செய்யுங்க.. தவெக ஆதரவாளர்கள் போட்ட லிஸ்ட்

    இதில் மதிகெட்டான் சோலை என்பது பேரிஜம் ஏரி செல்லும் பாதையில் உள்ள அடர்ந்த சோலைக்காடு ஆகும். இதற்கு செல்ல அனுமதி கிடையாது. முகப்பை மட்டுமே பார்க்க முடியும். அதாவது வியூ பாயிண்ட்டை மட்டுமே பார்க்க முடியும்.115 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இன்று வரை இந்த காடு அதிசயம் நிறைந்த மர்மமாகவே உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. தடையை மீறி உள்ளே நுழைந்து வழி தெரியாமல் சென்ற பலர் மீட்கப்பட்டுள்ளனர்

    English Summary

    A man, under the influence of alcohol, arrived with the intention of visiting the mysterious 'Mathikettan Solai' (a forest area) in Kodaikanal.