திண்டுக்கல்: முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதனால் இரட்டை வேடம் போடுகிறார் எனவும், அதனால் தான் ராகுல் காந்தி பிரதமர் என சொல்ல மறுக்கின்றார், அமைச்சர்களை விட்டு பேச வைக்கின்றார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் - திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," முன்னாள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா மீண்டும் எம்எல்ஏவாக தொடர்வதற்காக சபாநாயகிடம் கடிதம் கொடுத்துள்ளார். என்னுடைய ஆய்வில் உள்ளது சட்டசபை கூட்டம் முடிவடைந்த உடன் பதில் சொல்கிறேன் என சபாநாயகர் கூறியுள்ளார்.
சபாநாயகர் எது சொன்னாலும் நீதிமன்றம் தான் முடிவு செய்யும். கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடி நீதிமன்றம் சென்றுள்ளார். நீதிமன்றம் இறுதி தீர்ப்பு நிலையில்லாத வாழ்க்கை எப்படி உள்ளது என்று பாருங்கள். எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, என்ன குதிரை பேரும் நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பதவியே ரஜினாமா செய்துள்ளார். மறுபடியும் நான் எம்எல்ஏவாக தொடருகிறேன் என்று சொல்வது குழந்தைகள் கூட தெரியும் செல்லாது என்று.. தேவையில்லாமல் சபாநாயகரிடம் மனு கொடுத்து கதாநாயகன் போல் காட்டுகிறார். இறுதி முடிவு நீதிமன்றம் தான் முடிவு செய்யும். ஏற்கனவே சட்டசபையில் தற்காலிக சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த யசோதா பொன்னம்பலம் அமர்ந்து உள்ளனர். தற்பொழுது தவெக சத்தியபாமாவை நாங்கள் தான் மாற்று சபாநாயகர் அமைத்துள்ளோம் என தவெக கூறி வருகிறது. ஏற்கனவே பல பெண்கள் எம்எல்ஏக்கள் சபாநாயகராக இருக்கையில் அமர்ந்துள்ளனர். எல்லாமே முதலில் தாங்கள் தான் செய்தது போல் ஆளும் கட்சியினர் காட்டுகின்றனர். அது பொய். உண்மைக்கு மாறானது. தவறான தகவலை பரப்பி வருகின்றனர். தான்தோன்றித்தனமாக அரசு செயல்படுகிறது எதையும் செய்யலாம் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கலாம். இவர்கள் புதிதாக கட்டுவது போல் காண்பிக்கிறார்கள் என்ன நடக்கப்போவது என்ன முடிய போகிறது என்பதை தெரியாது. சுதந்திரம் வாங்கினதுக்கு பின்பு உள்ள அனைத்து முதலமைச்சர்களும் இந்த சட்டமன்றத்தில் அரங்கில் தான் இருந்துள்ளனர். இதன் முடிவு என்னவென்று தெரியாது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விலகுவதற்கான சூழ்நிலைகளை சொல்லிவிட்டார்கள். கூட்டணியில் இருக்க மாட்டோம். எதிலும் இருக்க மாட்டோம். எங்களது கொள்கைகளை நிறைவேற்றுகிறார்களோ? அவருடன் இருப்போம் என்று இரண்டு பேரும் சொல்லிவிட்டார்கள். ஆல்மோஸ்ட் விலகுகிறோம் எனக் கூறிவிட்டார்கள். பிரதமர் ராகுல் தான் என சொல்லவில்லை என்றால் காங்கிரஸ் விளக்குவோம் என கூறிவிட்டார்கள். இவர்களை எல்லாம் சரி பண்ணுவதற்காக தான் கூட்டம் நடத்துகிறார்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். விஜய் அடுத்த பிரதமர் என அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர். அதிகாரபூர்வமாக இதனை மறுக்க வேண்டியது முதலமைச்சர் விஜய். மந்திரிகளை விட்டு அடுத்த பிரதமர் விஜய் தான் என்ன பேச விடுகிறார்கள். ராகுல் தான் பிரதமர் என சொல்ல வேண்டியது. பிரதமர் ஆக வேண்டிய ஆசை விஜய்க்கு இருக்கிறது என்று தான் அர்த்தம். இரட்டை வேடம் போடுகிறார்கள். நடிகர் விஜய் தேர்தலுக்கு முன்பு ஒரு வாக்குறுதி தேர்தலுக்குப் பின்பு ஒரு வாக்குறுதி என பொய்யான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். இதனை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள். " என்றார்.திண்டுக்கல் சீனிவாசன்
சட்டசபை
பெண் சபாநாயகர்
கம்யூனிஸ்ட் கட்சிகள்
பிரதமர் விஜய்