கார் திருட்டு போகக்கூடாதாம்.. 2வது மாடியில் ஸ்கார்பியோவை தூக்கி வைத்த நபர்.. வினோதம்!

  • பாட்னா: கார் திருடு போய்விடக்கூடாது என்பதற்காக பொதுவாக பலரும் பாதுகாப்பான இடத்தில் காரை நிறுத்துவது வழக்கம். ஆனால், பீகாரில் ஒருவர் தனது புதிதாக வாங்கிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரை திருட்டில் இருந்து பாதுகாக்க செய்துள்ள காரியம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அவர் தனது காரை கிரேன் மூலம் வீட்டின் இரண்டாவது மாடிக்கு தூக்கி சென்று மேற்கூரையில் நிறுத்தியுள்ளார்.

    Advertisement

    இந்தியாவை பொறுத்தவரை கார் என்பது எப்போதுமே ஒரு எமோஷன். பார்த்து பார்த்து காரை வாங்கி, அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருப்பார்கள். காரை பத்திரமாக வைத்திருக்க பல்வேறு செயல்களை செய்வார்கள். ஆனால், இங்கு ஒருவரை அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

    Advertisement

    பீகார் இளைஞர்

    பீகாரின் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் சமீபத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரை வாங்கியுள்ளார். அவர் இஸ்ரேலில் பணியாற்றி வருவதால், தான் வெளிநாட்டில் இருக்கும் காலத்தில் காரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஓட்டுநரிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால், சில மாதங்களில் அந்த ஓட்டுநர் பணியை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் தான் வெளிநாட்டில் இருக்கும்போது காரின் பாதுகாப்பு குறித்து மனோஜ் யாதவுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. காரை பாதுகாப்பாக வைத்திருக்க வேறு வழிகளை யோசித்த மனோஜ், இறுதியில் காரையே வீட்டின் மேற்கூரையில் சென்று நிறுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு, ஸ்கார்பியோ காரை வீட்டின் இரண்டாவது மாடிக்கு மேலே தூக்கி சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

    Advertisement

    வீடியோ

    அந்த வீடியோவில், ஸ்கார்பியோ கார் கிரேனில் கட்டப்பட்டு காற்றில் தொங்கிய நிலையில் காணப்படுகிறது. பின்னர் கிரேன் மூலம் கார் மெல்ல மெல்ல இரண்டு மாடி வீட்டின் மேற்கூரையை நோக்கி தூக்கப்படுகிறது. சரியான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகு, காரை மிகவும் கவனமாக மேற்கூரையில் இறக்குகின்றனர். வீட்டின் மேற்கூரையில் கார் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி பார்ப்பவர்களுக்கு வித்தியாசமாக இருப்பதால், இந்த வீடியோ இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    நெட்டிசன்கள்

    குறிப்பாக, "கார் திருட்டு போகாமல் இருக்க வீட்டுக்குள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.. ஆனால் வீட்டின் மாடிக்கே கொண்டு சென்றுவிட்டார்களே" என்ற வகையில் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் கிரேன் மூலம் இப்படி காரை தூக்குவது பாதுகாப்பானது இல்லை என்றும் இதற்காகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் இது தொடர்பாக மனோஜ் குமார் தரப்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் வரவில்லை.

    Advertisement

    ஸ்கார்பியோ கிளாசிக்

    இந்திய கார் சந்தையில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் இருக்கிறது. இரு வேரியண்டுகளில் விற்கப்படும் இந்த காரின் ஆரம்பக்கட்ட விலை ரூ. 13.37 லட்சம் ஆகும். அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய டாப்-எண்ட் மாடலான 'S11' வேரியண்ட்டின் விலை ரூ. 17.40 லட்சம் வரை செல்கிறது. விலை இந்தளவுக்கு இருந்தாலும் கூட இதற்கென தனியாக இரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள். கரடுமுரடான சாலைகளையும் எளிதாகக் கடக்கும் வகையிலான இது வலுவான கட்டமைப்பு மற்றும் உயரமான இருக்கை அமைப்பை கொண்டுள்ளது.

    English Summary

    A Bihar man has reportedly used a crane to lift his newly purchased Mahindra Scorpio Classic to the rooftop of his two-storey house(ஸ்கார்பியோ காரை மாடியில் நிற்க வைத்த நபர்): Mahindra Scorpio car latest news in tamil.