திண்டுக்கல்: சந்தேகம் ஒரு குடும்பத்தையே சிதைத்துவிடும் என்பதற்கு திண்டுக்கல்லில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சி உதாரணமாகியுள்ளது... விரட்டி விரட்டி காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், கடைசியில் அவரையே கொடூரமாகக் கொலை செய்துள்ளார். நண்பர்கள் சொன்ன தகவல், செல்போனில் பார்த்த வீடியோக்கள் என சந்தேகம் வளர்ந்த நிலையில், தீபாவளி நாளில் நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (28), தனது மனைவி சுவேதா (24)வின் நடத்தையில் சந்தேகப்பட்டு, தீபாவளியன்று ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
நடத்தை சரியில்லை என்று அவரது நண்பர்கள் சொன்னார்கள்.. இதை கேட்டதுமே, அதிர்ச்சியடைந்த கணவர், உடனே வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.. இந்த தகராறு வலுத்து மிகப்பெரிய சண்டையாக உருவெடுத்துள்ளது.. ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த கணவர், அரிவாளால் மனைவியை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டார்.. சுவேதாவின் சடலம் கீழே கிடந்ததுமே, நேராக காவல் நிலையம் சென்ற அஜித்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து சில தகவல்கள் கூடுதலாக வெளியாகி வருகின்றன.. அதில் இந்த தம்பதி பற்றின தகவலும் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மனைவி சுவேதா அதாவது, திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவராம் சுவேதா.. தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்த டிரைவர் அஜித்குமாருக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் 2 பேருமே உயிருக்கு உயிராக காதலிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே சுவேதா, சோஷியல் மீடியாவில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து அஜித்குமார் கோபப்பட்டுள்ளார்.. அத்துடன் சுவேதா மீதும் சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது.. இதன் காரணமாக இருவருக்கும் மீண்டும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. செல்போனால் வந்த சந்தேகம் இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக 2 நாட்களுக்கு முன்பு அஜித்குமார் மனைவியைப் பார்க்க வந்துள்ளார். அப்போது சுவேதாவின் செல்போனை பார்த்த அவருக்கு மறுபடியும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மனைவியிடம் விளக்கம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நண்பர்கள் சிலர் சுவேதாவின் நடத்தை குறித்து அஜித்குமாரிடம் சொல்லியிருக்கிறார்கள்.. இதனால் கடுமையான ஆத்திரத்தில் அஜித்குமார் இருந்தாராம். இந்நிலையில், சுவேதாவின் செல்போனை, பார்த்ததுமே ஆத்திரமடைந்த அஜித்குமார் வீட்டிலிருந்த அரிவாளால் சுவேதாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். அதற்கு பிறகுதான், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்துள்ளார். போலீசார் விசாரணை இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட சுவேதாவின் உடலை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு போஸ்ட் மார்ட்டம் நடந்தபோது, சுவேதாவின் உறவினர்கள் ஏராளமானோர் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காதலித்து திருமணம் செய்துகொண்ட ஒரே வருடத்தில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவரே அவரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...!!
மனைவியுடன் தகராறு