ஆளுதான் பார்க்க டம்மி மாதிரி இருப்பாங்க.. செஞ்சது பலே வேலை! 15000 பேரை ஏமாற்றிய ‘ஃப்ராடு’ Couple!

  • திண்டுக்கல்: திண்டுக்கல் மற்றும் மதுரையில், கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்தால் இரண்டே மாதத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பான தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 15,000 பேர் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படும் நிலையில் 9000 பேர் தற்போது புகார் அளித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    Advertisement

    ​திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி சுமார் 8500க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ₹30 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றதாக. கூறப்படும் நிலையில்

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காசம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது கிராமத்தை சேர்ந்த பலர், 'FQL Exchange' மற்றும் 'VG Investment' ஆகிய செல்போன் செயலிகளில் ₹50,000 முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இளையராஜா உட்பட ஊர் மக்கள் பலர் பெயரில் போலி கணக்குகளைத் தொடங்கி (ID), அதில் டிஜிட்டல் கரன்சியான USDT வரவு வைக்கப்பட்டது போல கணினித் திரையில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. ​தற்போது, முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது (Withdrawal) கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல் ஏமாற்றப்பட்டு, இறுதியாக அந்தச் செயலியும் முடக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இளையராஜா உட்பட சுமார் 8500க்கும் மேற்பட்டோரிடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதன்படி, ​ரமேஷ், ​விஜய், ​அனிதா, தீனதயாளன், பிரியதர்ஷினி, ரஞ்சித், ​அருண், கஜேந்திரன், திருமலை மற்றும்​ஆண்டிச்சாமி ஆகியோர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகள் 340, 316(2), 318(4) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 66(d)-ன் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ், விஜய், அனிதா ஆகிய மூவரும் கைது செய்தனர்.

    Advertisement

    இந்நிலையில் இதில் சப் ஏஜெண்டுகளாக செயல்பட்ட நத்தம் அருகே மூங்கில்பட்டி ஊராட்சி செல்லப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரமணி(25) மற்றும் காசம்பட்டி பகுதி சேர்ந்த சித்திரம் மகன் விஜயன் (49),திருமலை மகன் ஜெயபிரகாஷ் (28),மூக்கன் மகன் சுரேஷ்(30),சாமிராஜ் மகன் பிரேம்நாத்(26), அவையன் மகன் மகாதேவன்(38) ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து மதுரையில் இருந்து வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் விசாரணைக்காக மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.

    Advertisement

    FQL,AG ஆன்லைன் செயலி மோசடி தொடர்பாக நத்தம் பகுதியை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கைது எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு (DCB) அலுவலகத்தையோ அல்லது சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐயோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

    English Summary

    A Dindigul crypto investment scam allegedly cheated thousands with promises of doubled returns, leading to 11 arrests and thousands of complaints.