ஆபரேசன் துரைமுருகன்.. 2வது ஃபைலை ஓபன் செய்த விஜய்? தமிழகத்தை அதிர வைத்த DVAC ரெய்டு! பரபர பின்னணி!

  • திண்டுக்கல்: பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க நான் 400 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது விஜய் அரசு. தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டு 4000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக கூறி தொழிலதிபர் ரத்தினம் வீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்திருக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் 28 இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்பட்டதாக எழுந்த புகாரில், சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    Advertisement

    அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், தமிழகத்தின் 28 ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட 196.37 ஹெக்டேர் பரப்பளவுக்கு பதிலாக, சுமார் 987.10 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அகழ்வு நடைபெற்றதாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத மணல் அகழ்வு

    இதன் மூலம் சுமார் 23.64 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டிருக்கலாம் என்றும், அதன் மதிப்பு ரூ.4,730 கோடி என்றும் அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்கள் மற்றும் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியது. மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    Advertisement
    துரைமுருகன் வருத்தம்.. பேத்திக்கு சுயமரியாதை திருமணம் நடத்தாதது ஏன்? விளக்கம்

    திண்டுக்கல் ரத்தினம்

    இந்த விவகாரத்தில் எஸ். ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அறப்போர் இயக்கமும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக புகார் அளித்து ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது. மணல் அகழ்வில் அனுமதிக்கப்பட்ட எல்லைகளை மீறியது, அரசு வருவாய்க்கு ஏற்பட்ட இழப்பு, அரசு அதிகாரிகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விசாரணையின் கீழ் உள்ளன.

    திமுக ஆட்சி

    சட்டவிரோத மணல் அகழ்வால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், ஆறுகளின் இயற்கையான நீரோட்டம், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக திமுக ஆட்சிக் காலமான 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்த முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    Advertisement

    வழக்கு பதிவு

    மணல் எடுத்துச் செல்ல வழங்கப்படும் அனுமதி சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ட்ரோன்கள், செயற்கைக்கோள் படங்கள், ஜியோ ஸ்கேனிங் உள்ளிட்டவை மூலம் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ரூ.1427,34,23,059 கோடி மோசடி.. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது பாய்ந்த வழக்கு! பின்னணி

    லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டவர் மட்டுமல்லாது திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மாஜி தலைமை பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி உள்ளிட்ட 14 அரசு ஊழியர்கள் 10 தனி நபர்கள் உள்ளிட்ட 28 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று திண்டுக்கல்,சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், வேலூர் உள்ளிட்ட 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    துரைமுருகன்

    இந்த சோதனையில் 825 ஆவணங்கள், 11 டிஜிட்டல் சாதனங்கள், 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை துறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 400 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அடுத்த அஸ்திரமாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வழக்கில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Former minister Duraimurugan and 27 others face cases as DVAC searches multiple locations over alleged illegal sand mining.