விஜய் அங்கிள்.. பழனியில் 100 கோடி நிலம் 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது எப்படி? திமுக 6 கேள்விகள்

  • திண்டுக்கல் : பழனியில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாக பத்திரம் பதிவு பண்ணி கொள்ளையடிச்சிருக்காங்க. இது ஏதோ சாதாரணமாக நடந்த விஷயம் கிடையாது. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பண்ணியிருக்காங்க.. ஒரு கோவில் நிலத்தை பத்திரம் பதியணும்ன்றதுக்காகவே, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு அந்த இடத்துக்கு அவசர அவசரமா டிரான்ஸ்பர் போடுறாங்க" என்று பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் திமுக ஐடிவிங்க் எழுப்பி பதிவிட்டுள்ளது.

    Advertisement

    திமுக ஐடி விங்க் பழனி கோயில் 100 கோடி நிலம் தொடர்பானசெய்திகளை பகிர்ந்திருப்பதுடன், கொடைக்கானல் சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தியையும் பகிர்ந்துள்ளது. அதில் செய்தியில், பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் எனக்கூறி, முருகதாஸ், திருப்புகழ் உள்ளிட்டோர் சில நாட்களுளுக்கு முன்பு இருவருக்கு விற்பனை செய்தனர் என்றும், 2 கோடிக்கும் குறைவான மதிப்புடைய நிலம் என்று இருவரது பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டது என்றும், இந்த பத்திரப்பதிவினை செய்த கொடைக்கானல் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் உள்ளது.

    இந்த செய்தியை பகிர்ந்துள்ள திமுக ஐடி விங்க், வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தொட மாட்டேன் தொடவும் விட மாட்டேன், அப்படின்னு மேடைக்கு மேடை சும்மா வீர வசனம் பேசுறீங்களே விஜய் அங்கிள் ஆமா, நீங்க என்ன டாஷ் புடுங்கினீங்கன்னு உங்க நடவடிக்கையிலேயே தெரியுது.

    Advertisement

    100 கோடி ரூபாய்க்கும் மேல மதிப்புள்ள கோவில் சொத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடா பத்திரம் பதிவு பண்ணி கொள்ளையடிச்சிருக்காங்க. இது ஏதோ சாதாரணமா நடந்த விஷயம் கிடையாது. பக்காவா ஸ்கெட்ச் போட்டு பண்ணியிருக்காங்க

    ஒரு கோவில் நிலத்தை பத்திரம் பதியணும்ன்றதுக்காகவே, ஒரு குறிப்பிட்ட அதிகாரிக்கு அந்த இடத்துக்கு அவசர அவசரமா டிரான்ஸ்பர் போடுறாங்க. மத்த அதிகாரிகளை எல்லாம் அன்னைக்குன்னு பார்த்து லீவு எடுக்க வைக்கிறாங்க. சரி, பத்திரம் பதிஞ்சு முடிஞ்ச அடுத்த நாளே அந்த பதிவாளரை அங்கிருந்து வேற இடத்துக்கு மாத்துறாங்க இதெல்லாம் தற்செயலா நடக்குற விஷயமா? இது அப்பட்டமான, திட்டமிட்ட பகல் கொள்ளை.

    Advertisement

    முதலமைச்சர் அவர்களே, இதுக்கு நீங்க எடுத்த நடவடிக்கை என்ன? உங்க கண் முன்னாடி இவ்வளவு பெரிய கொள்ளை நடக்கும்போது நீங்க என்ன டாஷ் பண்ணிட்டு இருக்கீங்க?

    அமைச்சர் ரமேஷ் அவர்களே, மறுஆய்வுக் கூட்டம் நடத்தி சும்மா சீன் போடுறீங்களே100 கோடி சொத்து உங்க கண் முன்னாடியே கொள்ளை போறதுக்கு நீங்கதான் துணை போயிருக்கீங்கன்னு உங்க நடவடிக்கையே காட்டுது. மக்கள் சொத்தையும், மக்கள் பணத்தையும் காப்பாத்த துப்பில்லாத உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? யோக்கியதை இருந்தா உடனே உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போங்க. அமைச்சர் ரமேஷ் அவர்களே, மறுஆய்வுக் கூட்டம் நடத்தி சும்மா சீன் போடுறீங்களே100 கோடி சொத்து உங்க கண் முன்னாடியே கொள்ளை போறதுக்கு நீங்கதான் துணை போயிருக்கீங்கன்னு உங்க நடவடிக்கையே காட்டுது. மக்கள் சொத்தையும், மக்கள் பணத்தையும் காப்பாத்த துப்பில்லாத உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி? யோக்கியதை இருந்தா உடனே உங்க பதவியை ராஜினாமா பண்ணிட்டு வெளிய போங்க" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    The DMK IT Wing has raised various questions and suspicions, stating that temple property in Palani—valued at over ₹100 crore—was misappropriated through the fraudulent registration of a deed for a mere ₹2 crore. They noted that this was not a routine occurrence but a meticulously planned scheme.