அன்பில் மகேஷ் கைது சரவெடி வைங்க.. என்கிட்டயே பணம் வாங்கினார்.. தீயாய் பரவும் திமுக நிர்வாகி ஆடியோ

  • திண்டுக்கல்: தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஊழல் புகாரில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். திமுக மூத்த தலைவர்கள் இதை கண்டித்து வருகிறார்கள். ஆனால் மறுபக்கம் அன்பில் மகேஷ் கைதை திமுகவினரே கொண்டாடுவதாக தகவல் வெளியாகி வருகிறது. பணியிட மாறுதலுக்காக அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்தேன. அவர் கைது நடவடிக்கையை சரவெடி வெடித்து கொண்டாட வேண்டும் திமுக நிர்வாகியே பகிரங்க ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

    Advertisement

    அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்தேன்

    திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சி துணை தலைவரும், திமுகி நிர்வாகியுமான ஜாகீர் உசேன் பெயரில் வெளியாகியுள்ள ஆடியோவில், "ஐயா அமைச்சர் ஐ. பெரியசாமியின் நட்புக்கே மரியாதை கொடுக்காதவர் அன்பில் மகேஷ். பணியிட மாறுதலுக்காக பெரியசாமி 3 முறை கடிதம் கொடுத்தார். 3 முறையும் அதை அன்பில் மகேஷ் அவாய்ட் செய்தார். ஒரு மூத்த அமைச்சர், கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் கொடுத்த கடிதத்தையே புறக்கணித்திருக்கிறார். பலமுறை நேரில் போயும் வேலைக்கு ஆகவில்லை.

    Advertisement

    அன்பில் மகேஷல்லாம் கட்சிக்கு தகுதியானவர்கள் இல்லை. அன்பில் மகேஷ் கைது என்றால் எல்லாரும் சரவெடி விடுங்கள். அதில் தவறு இல்லை. அமைச்சருக்கே பங்கம் விளைவித்தவர் அவர். அவர் கைதாவதில் ஒன்றும் தவறில்லை. அது வரவேற்கத்தக்கது ஒன்றுதான். பணி மாறுதலுக்காக அவருக்கு நான் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்துள்ளேன். இதை எங்கே கேட்டாலும் நான் சொல்வதற்கு தயாராக உள்ளேன்.

    தனுஷ் அரசியல் வருகை.. அலர்ட் மோடில் திமுக.. இளைஞரணியை பலப்படுத்தும் பணியில் உதயநிதி ஸ்டாலின்!

    திமுக நிர்வாகி குமுறல்

    ஒரு தலைமை ஆசிரியர் மூலமாக சென்னையில் கொண்டு போய் கொடுத்திருக்கிறேன். அரியலூர் சி.இ.ஓ அலுவலகம் மூலம் முயற்சி செய்து பணம் கொடுத்தேன்.பணி மாறுதலுக்காக நான் பணம் கொடுத்தேன். இதை எங்கு வேண்டுமானால் வந்து சொல்ல தயார். இதேபோல வளவிசெட்டிபட்டியில் 11 ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்காக தலா ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கட்டி தான் வந்துள்ளார்கள். அந்த இடத்திற்கு பணம் கட்டி தான் வந்துள்ளனர். யாரும் சும்மா வரவில்லை.

    Advertisement

    மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாற்றம் என்றால் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம், மாவட்டத்திற்குள்ளேயே பணியிட மாற்றம் என்றால் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பணம் கட்டி தான் வந்துளள்னர். இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார். அன்பில் மகேஷ் செய்து வரவேற்கத்தக்கது. யாரும் வருத்தப்பட வேண்டாம். அவர் ஜெயிலுக்கு போக வேண்டிய ஆள். என்னுடைய மனைவியின் பணியிட மாறுதலுக்காக நான் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் செலவழித்தேன். சொந்தக் கட்சிக்காரர்களுக்கே இந்த நிலை என்றால் மாற்றுக் கட்சியினர், மக்களின் நிலையை யோசித்து பாருங்கள்".

    English Summary

    DMK Former Minister Anbil Mahesh arrested in corruption case. DMK person Jaheer Hussain audio about Anbil Mahesh going viral.