பழனி கோயில் நில மோசடி.. திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா அதிரடியாக சஸ்பெண்ட்!

  • திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பு கொண்ட நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்ட பதிவளார் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

    Advertisement

    பழனி கோயில் மலையடிவாரத்தில் கோயில் மடத்துக்கு சொந்தமாக 1.40 ஏக்கர் நிலம் இருக்கிறது. கடந்த 60 ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த இந்த நிலத்தை, கடந்த ஆண்டுதான் கோயில் நிர்வாகம் மீட்டு எடுத்திருந்தது. இதையடுத்து இந்த இடம் பக்தர்களுக்கான இலவச பார்க்கிங் ஏரியாவாக செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    இப்படி இருக்கையில் கடந்த 6ம் தேதியன்று, திருப்புகழ் மற்றும் முருகதாஸ் என்கிற இரண்டு நபர்கள்.. நாங்கள்தான் அறக்கட்டளை நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு ரூ.100 கோடி சந்தை மதிப்பு கொண்ட இந்த நிலத்தை வெறும் ரூ.2 கோடிக்கு வெள்ளத்துரை மற்றும் சேதுபதி என்கிற இரண்டு தனிநபர்களுக்கு விற்றிருக்கின்றனர்.

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பழனி சார் பதிவாளர் அன்றைய தினம் விடுமுறையில் இந்ததால் கொடைக்கானல் சார் பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், ஒரு நாள் மட்டும் பழனி சார் பதிவாளராக கூடுதல் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை வைத்து இந்த நில விற்பனை நடந்திருக்கிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்த நிலையில், கோயிலின் செயல் அலுவலர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசரமாக மேல்முறையீடு செய்திருந்தார். அதற்குள் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    Advertisement

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த பத்திரப்பதிவு செல்லாது என்று உத்தரவிட்டது. மேலும், இந்த சம்பவத்தில் சார் பதிவாளர் மீது வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் போதாது.. தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. மறுபுறம் அறக்கட்டளை நிர்வாகியான முருகதாஸ், நிலத்தை கிரயம் பெற்ற சேதுபதி, வெள்ளத்துரை உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.

    அடுத்த கட்ட விசாரணைக்கு போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். விரைவில் அவரும் விசாரணை வளையத்திற்குள் வருவார் என்று சொல்லப்படுகிறது.

    English Summary

    Palani Temple Land: A controversy had arisen after land worth ₹100 crore, belonging to the Arulmigu Dhandayuthapani Swamy Temple in Palani, was registered for a mere ₹2 crore. Amidst this, Sasikala, the Dindigul District Registrar, has now been suspended.