Avocado: கொடைக்கானலில் அவோகேடோ சாகுபடி! 5 வருஷத்தில் பழம்! பிரதமரே பாராட்டிய விவசாயி சந்திரசேகர்

  • திண்டுக்கல்: கொடைக்கானில் சிறந்த முறையில் அவோகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட் சாகுபடி செய்து வரும் விவசாயி சந்திரசேகரை, மன்கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகளை தெரிவித்திருந்தார். இதற்காக அவருக்கு அந்த விவசாயி நன்றி தெரிவித்திருக்கிறார்.

    Advertisement

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ் மலை பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த சந்திர சேகர் என்பவர் மருந்தாளுநர் படிப்பில் டிப்ளமோ படித்துள்ளார்.

    Advertisement

    இவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மூலையாறு பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் காபி, பலா, வாழை மற்றும் அவகோடா ஆகியவற்றை விவசாயம் செய்து வருகிறார்.

    குறிப்பாக கடந்த 10 வருடமாக அவகோடா விவசாயத்தில் அதிக ஆர்வம் காட்டி வரும் சந்திரசேகர், பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பழமாக இருப்பதால் சந்தைகளில் அதிக மவுசு நிலவி வருவதாக தெரிவித்தார்.

    மேலும் இதில் அதிக லாபம் கிடைக்கும் விவசாயமாகவும், இயற்கை உரங்களை மட்டுமே கொண்டு விளையும் பழம் என்கிறார். அதே போல ஒரு அவகோடா நாற்று நடவு செய்து 5 வருடங்களில் பழம் கொடுக்கும் மரமாக வளர்ந்து, வருடத்திற்கு இரண்டு முறை விளைச்சல் தர கூடியது.

    Advertisement

    தற்போதைய பொதுவான விவசாயங்களை காட்டிலும் இந்த அவகோடா விவசாயத்தில் நல்ல லாபம் தரும் விவசாயமாகவும், அதனை பராமரிப்பு செய்வதில் பெரிய சிரமம் ஏதுமில்லை என்ற சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக அவகோடா விவசாயம் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரியிடம் பேட்டி கொடுத்ததாகவும் அதை பாரத பிரதமர் நரேந்திர மோடி பார்த்துவிட்டு மன்கீபாத் கூட்டத்தில் சிறந்த முறையில் அவகோடா விவசாயம் செய்ததை சுட்டிக்காட்டி தன்னை பாராட்டியுள்ளார்.

    அது தனக்கும், தமது குடும்பத்தினருக்கும் பெருமையாகவும், மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்த சந்திரசேகர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    ஆப்பிள், அவகோடா, டிராகன் பழம் உள்ளிட்டவைகள் தமிழகத்தில் சில விவசாயிகள் வளர்த்து அறுவடை செய்து வருகிறார்கள். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள் சாகுபடிக்கு போதுமான வருமானம் இல்லாததால் தற்போது அரபு நாடுகளில் விளைவிக்கப்படும் பேரிச்சை சாகுபடியிலும் விவசாயிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    Advertisement

    அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள தவளம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவர் தக்காளி, நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் சாகுபடி செய்து வந்துள்ளார்.

    எதிர்பார்த்தப்படி லாபம் கிடைக்காததால் மாற்று பயிர் ஏதாவது சாகுபடி செய்யலாம் என்ற யோசனையில் தான் அரபு நாட்டில் இருந்து பேரிச்சை செடிகளை வாங்கி இயற்கை விவசாயம் மூலம் சாகுபடி செய்துள்ளார்.

    அந்த செடிகள் நன்கு வளர்ந்து பேரிச்சை மரத்தில் கொத்து கொத்தாக பேரிச்சைப்பழத்தின் விளைச்சலை கண்டு விவசாயி ஈஸ்வரன் மகிழ்ச்சியடைந்தார். ஒரு கிலோ பேரிச்சம்பழம்
    ரூ.200-க்கு வியபாரிகள் கொள்முதல் செய்ய முன் வருவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்துள்ளார்.

    English Summary

    PM Narendra modi in Mann ki baat programme praises Kodaikkanal farmer for cultivating Avacado fruit.