விஜய் ஏமாத்திட்டாரு..போராட்டத்தில் குதிக்க போறோம்! தவெக அரசுக்கு அரசு ஊழியர்கள் வார்னிங்! என்னாச்சு?

  • திண்டுக்கல்: முந்தைய அதிமுக, திமுக அரசுகளைப் போன்றே தற்போதைய அரசும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புறக்கணிக்கிறது எனவும், முதலமைச்சரையோ அல்லது முதலமைச்சரின் செயலாளரையோ, துறை அதிகாரிகளையோ சந்தித்து மனு அளிக்க முடியாத சூழல் உள்ளது உள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர் அரசு ஊழியர்கள். குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக புதிய அரசு செயல்படுகிறது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, டி.ஏ.பி.எஸ் (TAPS) திட்டக் குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் குதிப்போம் எனவும் எச்சரித்துள்ளனர்.

    Advertisement

    திண்டுக்கல் எம்.எஸ்.பி. ஆடிட்டோரியத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை நடைபெற்றது. பேரவையின் துவக்க நிகழ்ச்சியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து கொடி அணிவகுப்பு துவங்கி அரங்கை வந்தடைந்தது.

    Advertisement

    பேரவைக்கு சங்கத்தின் மாநில தலைவர் மு.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாநில தணிக்கையாளர் ச.முபாரக் அலி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

    அரசு ஊழியர்கள்

    இதில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான விதிமுறைகளை உடன் வெளியிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாநில பிரதிநிதித்துவப் பேரவை

    தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை பொதுச் செயலாளர் சோமசுந்தரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," தற்போதைய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான முடிவுகளையும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் எடுத்து வருகிறது. முந்தைய அதிமுக, திமுக அரசுகளைப் போன்றே தற்போதைய அரசும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புறக்கணிக்கிறது.

    Advertisement

    அரசாணை

    குறிப்பாக, எம்.ஆர்.பி செவிலியர்களை மாவட்ட முகமைகள் மூலமும் ஒப்பந்த முறையிலும் பணியமர்த்தும் அரசாணை, சென்னை மாநகராட்சி துப்புரவுப் பணிகளுக்கு வெளிமுகமை ஒப்பந்தம் மூலம் ஆட்களை நியமிப்பது உள்ளிட்ட தனியார்மய நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

    காலமுறை ஊதியம்

    மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பி.பி.பி மற்றும் சி.ஓ.இ ஊழியர்களைக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    TAPS திட்டம்

    காலை சிற்றுண்டித் திட்டத்தில் தங்களை இணைக்கக் கோரும் சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கையில் அரசுக்குத் தெளிவில்லாமல் உள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, டி.ஏ.பி.எஸ் (TAPS) திட்டக் குளறுபடிகளைச் சரிசெய்வது, சாலைப் பணியாளர்களின் 41 மாத போராட்டக் காலத்தை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி பணி வரன்முறை செய்வது, அரசுத் துறைகளில் காலமுறை ஊதியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவது, கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்குவது உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    Advertisement

    பணி நிரந்தரம்

    முதலமைச்சரையோ அல்லது முதலமைச்சரின் செயலாளரையோ, துறை அதிகாரிகளையோ சந்தித்து மனு அளிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும், 'மாற்றம்' எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்தையே தந்துள்ளனர். அரசு தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநிலச் செயற்குழுக் கூட்டத்தின் முடிவின்படி சென்னையில் அரசுக்கு எதிராக வீரியமிக்க அடுத்தகட்டப் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்துள்ளார்.

    English Summary

    Government employees accuse the Vijay administration of ignoring key demands and warn of statewide protests if issues remain unresolved.