கொடைக்கானல் - தேனி சாலை துண்டிப்பு.. அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையின் நிலை என்ன?

  • திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கிறது. வெறும் சில மணி நேரத்திலேயே பெய்த அடைமழையால் கொடைக்கானல் நகரமே ஸ்தம்பித்து போனது. மறுபக்கம் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த பேய்மழையால், அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லக்கூடிய சாலை முழுவதுமாக சேதமடைந்துள்ளது. மிகவும் செங்குத்தான பள்ளத்தாக்கின் மீது அமைந்துள்ள அடுக்கம் பாதை மற்றும் கொடைக்கானல் நகரத்தின் தற்போதைய நிலை குறித்து பார்ப்போம்.

    Advertisement

    'மலைகளின் இளவரசியான கொடைக்கானல் கேரளாவின் மூணாறை போல் ஆண்டுக்கு 3,594 மில்லி மீட்டர் மழை பெய்யும் நகரம் கிடையாது. ஓரளவே மழை பெறும் நகரம் ஆகும். சுமார் 1,568 மி.மீ மழைதான் கொடைக்கானலில் ஆண்டுக்கு பெய்யும். வங்ககடலில் புயல் உருவாகும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் இந்த மழை பெருமளவு பெய்யும். தென்மேற்கு பருவ மழை ஓரளவே கொடைக்கானலுக்கு கைகொடுக்கும். உயரவேறுபாடு மற்றும் அடர்ந்த வனம் காரணமாக கொடைக்கானல் ஆண்டு முழுவதும் குளுகுளுவென இருக்கிறது. கொடைக்கானல் என்பது, ஊட்டி, மூணாறை ஒப்பிடும் போது, அதிக ஆபத்தான மலைவாசல் தளம் கிடையாது. மிக அமைதியான அழகான மலைவாசல் தளம். நில அமைப்பு ரீதியாக பார்த்தால் கூட, ஊட்டி, மூணாறைவிட ஓரளவு பாதுகாப்பான மலைவாசல் தளமும் கூட.. பெரிய பாதிப்பை சந்திப்பது என்பது அபூர்வம்

    Advertisement

    இந்த சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் மீண்டும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை அவ்வப்போது விட்டு, விட்டு கனமழை பெய்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானலில் 10 செ.மீ. வரை மழை பெய்திருக்கிறது.

    இந்த மழை காரணமாக கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பியது. இதனால் அதிக அளவு உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சியில் அதிக அளவு வெள்ளம் கொட்டியது. கொடைக்கானல் நகரை ஒட்டி உள்ள வட்டக்கானல் உள்பட பல்வேறு நீர்வீழ்ச்சிகளில் அதிக தண்ணீர் வெளியேறியது. கொடைக்கானல் பஸ் நிலையம் அருகேயும், வத்தலக்குண்டு மலைச்சாலையிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிந்தது

    Advertisement
    கொடைக்கானலில் பெரிய சம்பவம்! உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்ற சுற்றுலா பயணிகள்! போகாதீங்க

    கொடைக்கானல் பர்ன்ஹில் சாலையில் தடுப்புச்சுவர் சரிந்து விழுந்த காரணத்தால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கணிசமான இருசக்கர வாகனங்கள் மண்ணில் புதைந்து போயின. மரங்கள் விழுந்ததின் காரணமாக பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டதால் நகரமே இருளில் மூழ்கியது. கொடைக்கானலில் நேற்று பிற்பகல் 2 மணி முதல் இரவு வரை கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் விடுதிகள், ஓட்டல்களில் முடங்கினர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிக்கிறது.

    Advertisement

    கனமழை காரணமாக பெருமாள்மலை-அடுக்கம்-கும்பக்கரை மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கற்கள், மரங்கள் விழுந்து சாலை குண்டும் குழியுமாக மாறியது. இதையொட்டி பெருமாள் மலை-அடுக்கம் மலைப்பாதை மூடப்பட்டுள்ளது.

    கொடைக்கானல், குன்னூர், மாஞ்சோலையில் நிலச்சரிவு அபாயம்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

    இந்த சாலையில் விழுந்துள்ள மரங்களை வனத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொடைக்கானல் நகரம் இந்த வார இறுதியில் வருவதற்கு உகந்ததாக இருக்காது. பயணத்தை அடுத்த வாரம் அல்லது நிலைமை சீரடைந்த பிறகு திட்டமிடுவது சுற்றுலா பயணிகளுக்கு நல்லது

    English Summary

    Due to torrential rains in the Kodaikanal hill region, the road connecting Kodaikanal to Periyakulam via Adukkam has been completely damaged. Let us take a look at the current condition of the Adukkam route—which lies along a very steep valley—as well as the situation in Kodaikanal town.